முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுவையில் இருந்து வெளியே செல்ல கலெக்டருக்கு சி.பி.ஜ. தடை

ஞாயிற்றுக்கிழமை, 7 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

 

புதுச்சேரி, ஆக.8 - சுனாமி குடியிருப்பு கட்டியதில் முறைகேடு தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்ட கலெக்டர் ராகேஷ்சந்திரா புதுவையை விட்டு வெளியே செல்ல சி.பி.ஜ. தடை வதித்துள்ளது. புதுவையில் சுனாமியால் பாதிக்கப்பட்ட கடலோர பகுதி மக்களுக்கு குடியிருப்பு கட்டியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக சி.பி.ஜ. போலீசாருக்கு புகார் வந்தது. இந்த புகாரின் பேரில் சி.பி.ஜ. போலீசார் விசாரணை நடத்தினர். 

மேலும் கடந்த 1-ந் தேதி சுனாமி புனரமைப்பு திட்ட அமலாக்க முகமையின் திட்ட இயக்குனரும், புதுவை மாவட்ட கலெக்டருமான ராகேஷ்சந்திரா வீட்டில் சோதனை நடத்தினர். மறுநாள் குடியிருப்பு கட்டிய ஆந்திரா மாநிலம் ஜதராபாத்தில் உள்ள தனியார் நிறுவனத்திலும் சி.பி.ஜ. போலீசார் சோதனை நடத்தினர். 

இந்த 2 சோதனையின் போதும் சி.பி.ஜ. போலீசாருக்கு முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தெரிகிறது. இதையடுத்து சி.பி.ஜ. போலீசார் கலெக்டர் ராகேஷ்சந்திரா, சுனாமி திட்ட புனரமைப்பு அமலாக்க செயற்பொறியாளர் மோகன் மற்றும் குடியிருப்பு கட்டுமான பணியில் ஈடுபட்ட ஜதராபாத் தனியார் நிறுவனம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். 

இதன் பிறகு கடந்த 5-ந் தேதி மீண்டும் சி.பி.ஜ. போலீசார் புதுவை கலெக்டர் வீட்டில் சோதனை நடத்தி அவரிடம் விசாரித்தனர். அப்போது சுனாமி குடியிருப்பு கட்டும் பணியகள் நடைபெறும் இடங்களையும் சி.பி.ஜ. போலீசார் பார்வையிட்டனர். 

அதோடு கல்வித்துறை வளாகத்தில் உள்ள சுனாமி புனரமைப்பு திட்ட அமலாக்க முகமை அலுவலகத்திலும் சோதனை செய்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் சுனாமி நிதி கணக்கு உள்ள வங்கியிலும், கலெக்டர் மற்றும் அவரது குடும்பத்தினர் வங்கி கணக்குகளையும் சி.பி.ஜ. போலீசார் ஆய்வு செய்தனர். மேலும் வங்கியில் கலெக்டர் வைத்திருந்த லாக்கரையும் திறந்து பார்த்தனர். 

இவற்றில் இருந்தும் சுனாமி குடியிருப்பு கட்டியது குறித்து முக்கிய தகவல்கள் கிடைத்திருப்பதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து சி.பி.ஜ. போலீசார் கலெக்டர் ராகேஷ்சந்திரா புதுவையில் இருந்து வெளியே செல்ல தடை விதித்துள்ளனர். சி.பி.ஜ. அதிகாரிகளின் அனுமதி இல்லாமல் செல்லக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளனர். மேலும் அவரின் பாஸ்போர்ட்டையும் முடக்கியுள்ளதாக கூறப்படுகிறது. புதுவையில் பாங்கி ஒன்றில் ராகேஷ்சந்திராவின் லாக்கரில் சி.பி.ஜ. போலீசார் சோதனை செய்தனர். அதில் நகைகள் இருந்தன. அதை சி.பி.ஜ. போலீசார் முடக்கி வைத்துள்ளனர். சி.பி.ஜ. போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கை புதுவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago