முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாண்டிச் சேரியிலிருந்து சென்னைக்கு எரிசாராயம் கடத்தல்

ஞாயிற்றுக்கிழமை, 7 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.8 - பாண்டிச்சேரியிலிருந்து சென்னைக்கு எரிசாராயம் கடத்தி வந்த 2 லாரிகள் போலீசாரின் வாகன சோதனையில் பிடிபட்டது. சாராயம் கடத்திய 2 பேரை கைது செய்த போலீசார் ரூ.30 லட்சம் மதிப்புள்ள 8 ஆயிரத்து 820 லிட்டர் எரிசாராயத்தை கைப்பற்றினர். சென்னைக்கு பாண்டிச்சேரி மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வாகனங்களில் எரிசாராயம் கடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் கூடுதல் இயக்குனர் காந்திராஜன் மற்றும் சென்னை புறநகர் கமிஷனர் ராஜேஸ்தாஸ் ஆகியோர் உத்தரவிட்டனர்.இதையடுத்து மது விலக்கு அமல்பிரிவு கூடுதல் துணை கமிஷனர் ஜெயக்குமார் தலைமையில் உதவி கமிஷனர் மங்கையர் கரசி, இன்ஸ்பெக்டர்கள் ரியாசுதீன் வேலவன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு தாம்பரம் அருகே உள்ள இரணியம்மன் சோதனை சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த  2 லாரிகளை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரகசிய அறை அமைத்து பாண்டிச்சேரியில் இருந்து எரிசாராயம் கடத்தி வந்தது தெரிந்தது. இதைத் தொடர்ந்து லாரியை ஓட்டி வந்த  டிரைவர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சம் ரொக்கம் பணம், கைப்பற்றப்பட்டது. மேலும் 252 கேன்களில் மறைத்து வைத்திருந்த 8 ஆயிரத்து 820 லிட்டர் எரிசாராயம் மற்றும் ​லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மொத்த மதிப்பு ரூ.30 லட்சம் ஆகும். விசாரணையில், அவர் கள் பாண்டிச்சேரி முதலி யார் பேட்டையை சேர்ந்த தங்கராஜ் (47), விழுப்புரம் மாவட்டம் எடப்பாளையத்தை சேர்ந்த ஏழுமலை (31) என்பது தெரிந்தது. தங்கராஜ் கடந்த 1991 முதல் 2005 வரை பாண்டிச்சேரி டிரான்ஸ்போர்ட் பஸ்சில் டிரைவராக பணிபுரிந் துள்ளார். பின்னர் அந்த வேலையை விட்டு விட்டு வட மாநிலங் களில் இருந்து எரிசாராயம் கடத்தி வந்து, பாண்டிச் சேரி மற்றும் தமிழக எல்லையில் வைத்து சிறிய லாரிகளில் திண்டிவனம், செங்கல்பட்டு, சென்னை ஆகிய பகுதிகளுக்கு தனக்கு கீழ் உள்ள வியாபாரிகளுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

6 ஆண்டுகளாக அவர் இந்த தொழிலில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவர் மீது சென்னை, விழுப்புரம், பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் எரிசாராயம் கடத்தியது சம்மந்தமாக பல வழக்குகள் உள்ளது. சென்னையில் இவருக்கு ஒரு வழக்கில் பிடிவாரண்டு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.பல வருடங்களாக போலீசில் பிடிபடாமல் டிமிக்கி கொடுத்து வந்த அவர் இப்போது சிக்கி உள்ளார். ஏழுமலை தங்கராஜிடம் டிரைவராக வேலை செய்து வந்துள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்