முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடலோர நிர்வாகத்தை மேம்படுத்த நடவடிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 7 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.8​- உலகிலேயே நீண்ட கடற்கரையான இந்திய கடலோரத்தில் 29 கோடி பேர் வசிப்பதால், அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கடலோர நிர்வாகத்தை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என ஜெயந்தி நடராஜன் கூறினார். எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை நிறுவனர் தினவிழா சென்னையில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெயந்தி நடராஜன் 4 நாள் கருத்தரங்கை துவக்கி வைத்தார்.

டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை நிறுவனர் தின விழா தரமணியில் நேற்று நடந்தது.   இதையொட்டி 4 நாள் கருத்தரங்கை மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை மந்திரி ஜெயந்தி நடராஜன் தொடங்கி வைத்தார். விழாவில் மீனவர்களுக்கு உதவும் வகையில் இலவச செல்போன்களையும் வழங்கினார். எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் தமிழக கடலோர பகுதிகளில் வசிக்கும் மீனவர்களுக்கு இவை வழங்கப்படுகிறது.   இந்த செல்போன் மூலம் மீனவர்கள் தங்களுடைய சந்தேகங்களை 9282442311, 9282442312 ஆகிய ஹெல்ப் லைன் எண்களுக்கு தொடர்பு கொண்டு பருவநிலை மாற்றம், காலநிலை முன் எச்சரிக்கை, கடல் சீற்றம், கடல் வளம், மீன்கள் கிடைக்கும் இடங்கள் உள்பட மீன் வளத்துறை பற்றிய விளக்கங்கள் பெற முடியும். இந்திய தேசிய கடல் தகவல் சேவை மையத்துடன் இணைந்து எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் இத்திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. மீனவர்களுக்கு இந்த செல்போன் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் என்று ஜெயந்தி நடராஜன் கூறினார். 

விழாவில் அவர் பேசியதாவது:​   பேராசிரியர் எம்.எஸ். சுவாமிநாதன் பிறந்த நாள் விழா கொண்டாடப்படும் இந்நாளில் இங்கு இருக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. உங்களுடன் சேர்ந்து நானும் அவரை வாழ்த்துகிறேன். எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையின் 21​ம் ஆண்டு அறிக்கையை வெளியிடுவதிலும் மகிழ்ச்சி அடைகிறேன். நமது நாட்டில் உள்ள முன்னணி ஆராய்ச்சி நிறுவனங்களில் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையும் ஒன்று. விவசாயம் மற்றும் கிராம வளர்ச்சியில் இந்நிறுவனம் பல்வேறு ஆய்வுகளை பல ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறது.   இந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் எடுக்கப்படும் கொள்கை முடிவுகளில் பேராசிரியர் எம்.எஸ்.சுவாமிநாதனின் பங்கும் இருந்து வருகிறது. விவசாய துறை மற்றும் கிராம வறுமை ஒழிப்பு நடவடிக்கைகளில் இந்தியா சந்தித்து வரும் பிரச்சினைகளுக்கு, சாத்தியமான தீர்வுகளை இந்த அறக்கட்டளை வழங்கி வருகிறது. இதற்காக இந்த அறக்கட்டளையின் விஞ்ஞானிகளையும், ஆராய்ச்சியாளர்களையும் பாராட்டுகிறேன். இந்த ஆண்டு வன ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாயத்துக்கு அடுத்தபடியாக இந்தியாவில் காடுகள் வளர்ப்புக்குத்தான் அதிகளவில் நிலம் பயன்படுத்தப்படுகிறது.   இந்திய புள்ளியல் நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கையின்படி, இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் 19.27 சதவீதம் நிலப்பரப்பில் காடுகள் உள்ளன. சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் காடுகளின் பங்கு மகத்தானது. இந்தியா 600 பாதுகாக்கப்பட்ட பகுதிகளை கொண்டுள்ளது. இதில் 95 தேசிய nullங்காக்களும், 500 வன விலங்கு சரணாலயங்களும் அடங்கும். நமது நாடு nullநீண்ட கடற்கரையை கொண்டுள்ளது.   கடலோர மண்டலங்களை நிர்வகிப்பது மிகவும் சிக்கலான பிரச்சினை ஆகும். நமது கடலோர சூழல் தன்மையானது வெள்ளம், சுனாமி போன்ற இயற்கை பேரிடர்களில் இருந்து காக்கிறது. இந்தியாவின் கடலோர பகுதியின் மொத்த நீnullளம் 7 ஆயிரத்து 500 கி.மீ. ஆகும். சுமார் 29 கோடி பேர் கடலோரத்தில் வசிக்கின்றனர். இது நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 26 சதவீதம் ஆகும்.   இந்தியாவில் 1.6 மில்லியன் சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்கு பிரத்யேக பொருளாதார மண்டலம் அமைக்கப்பட்டுள்ளது. நமது கடலோரப் பகுதியில் 6 ஆயிரத்து 700 சதுர கி.மீ. பரப்பளவுக்கு மாங்குரோவ் காடுகள் உள்ளன. மாங்குரோவ் காடுகளையும், பவள பாறைகளையும் பாதுகாக்க சுற்றுச்சூழல் அமைச்சகம் கூடுதல் முயற்சிகளை எடுத்துள்ளது. கடலோர பகுதிகளில் குடியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், கடந்த 30 ஆண்டுகளில் 12 சதவீதம் மாங்குரோவ் காடுகள் அழிக்கப்பட்டுள்ளன.   கடலோர நிர்வாகத்தை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீன் பிடி துறை 60 லட்சம் பேருக்கு மேல் வேலை வாய்ப்பை வழங்கி உள்ளது. இந்தியாவின் மொத்த தேசிய வருவாயில் மீன்பிடி தொழில் மூலம் 1.2 சதவீதம் வருவாய் கிடைக்கிறது. ஏழைகள் பலருக்கு மீன்தான் புரோட்டீனை அளிக்ககூடிய சத்து உணவாக இருந்து வருகிறது. உலக வங்கி உதவியுடன், ஒருங்கிணைந்த கடலோர மண்டல மேலாண்மை திட்டத்தை சுற்றுச்சூழல் அமைச்சகம் தொடங்கியுள்ளது.     கடலோர பாதுகாப்பு மேலாண்மை தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் நிலையான கடலோர மேலாண்மைக்கான தேசிய மையம் ஏற்படுத்தப்படும். இது எம்.எஸ்.சுவாமி நாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை உள்பட 7 மாநில அளவிலான ஆராய்ச்சி நிறுவனங்களின் கூட்டு முயற்சியுடன் அமைக்கப்படுகிறது. 

இவ்வாறு ஜெயந்தி நடராஜன் பேசினார். 

இந்த  விழாவில் பேராசிரியர் எம்.எஸ்.சுவாமிநாதன், செயல் இயக்குனர் அஜய்பரிதா, இங்காய்ஸ் இயக்குனர் ஷெனாய், குவல்காம் மூத்த மேலாளர் ஆஷிஷ் அகர்வால், பத்திரிகையாளர் என். ராம், ஐ.ஓ.பி. செயல் இயக்குனர் நுபுர் மித்ரா மற்றும் அதிகாரிகள்  பலரும் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago