முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2ஜி ஊழல்: பிரதமர் அலுவலகம் பொறுப்பு அல்ல: அலுவாலியா

ஞாயிற்றுக்கிழமை, 7 ஆகஸ்ட் 2011      வர்த்தகம்
Image Unavailable

புதுடெல்லி,ஆக.8 - 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு பிரதமர் அலுவலகம் எந்த வகையிலும் பொறுப்பாகாது என்று திட்டக்கமிஷன் துணைத்தலைவர் மாண்டெக் சிங் அலுவாலியா கூறியுள்ளார். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்யும்போது நடந்த விவாதத்தின்போது 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு அனைத்தும் பிரதமர் அலுவலகத்திற்கு தெரியும் என்று ராசா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறினார்.

இந்தநிலையில் திட்டக்கமிஷன் துணைத்தலைவர் மாண்டெக் சிங் அலுவாலியா நேற்று கரன்தாபர் நிகழ்ச்சிக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு பிரதமர் அலுவலகம் எந்த விதத்திலும் பொறுப்பாகாது என்றார். பிரதமர் ஒரு மேற்பார்வையிடும் அமைச்சராக நடந்து கொள்ள முடியாது. கடந்த 2007-08-ம் ஆண்டில் ராசா, தொலைதொடர்பு அமைச்சராக இருந்தபோது 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்வதில் மிகவும் எச்சரிக்கையாகவும் வெளிப்படையாகவும் இருக்க வேண்டும் என்று பிரதமரின் அறிவுரையை ஆ.ராசா பின்பற்றினாரா என்று கேட்டதற்கு அலுவாலியா மேற்கண்டவாறு பதில் அளித்தார். 2007-ம் ஆண்டு நவம்பர் மாதம் 2-ம் தேதி ராசாவுக்கு மன்மோகன் சிங் எழுதிய கடிதத்தில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்வதில் நியாயமாகவும் வெளிப்படையாகவும் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மக்களின் நலன் சம்பந்தப்பட்டதாக இருப்பதால் அந்த கடிதத்தை பிரதமர் எழுதினார். அதற்கு பதில் அளித்து எழுதிய கடிதத்தில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடைமுறையில் உள்ள கொள்கைகள் பின்பற்றப்படும் என்றும் ஏதாவது மாற்றம் இருந்தால் சொலிசிடர் ஜெனரல் சம்மதத்துடன்தான் செய்யப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!