முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நடவடிக்கைக்கு பாராட்டு

ஞாயிற்றுக்கிழமை, 7 ஆகஸ்ட் 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை, ஆக.8 - சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா எடுத்துவரும் நடவடிக்கைகள் சிறப்பாக உள்ளதாகவும் அதற்கு சுற்றுச்சூழல் அமைச்சர் என்ற முறையில் பாராட்டு தெரிவிப்பதாகவும், தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு தருவதாகவும் ஜெயந்திநடராஜன் கூறினார். 

மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஜெயந்தி நடராஜன் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:​

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சென்னையை தூய்மையாக ஆக்குவதற்கு ஒரு முயற்சியின் அங்கமாக ஹெலிகாப்டரில் சென்று சர்வே செய்த அணுகுமுறையை வரவேற்கிறேன்.

நான் தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய அமைச்சராக இருப்பதால் சுற்றுச்சூழலை பாதுகாக்க தமிழக அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு கொடுப்பேன். எனது அமைச்சகமும் இதற்கு முழு ஆதரவை வழங்கும். பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பது குறித்தும் நான் ஆராய்ந்து வருகிறேன். எனது அமைச்சகம் பல்வேறு திட்டங்களை ஆராய்ந்து வருவதில் இதுவும் ஒன்றாகும். நமது உள்நாட்டு விஷயங்களில் எந்த ஒரு திட்டத்திலும் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறதா? என்பதை உறுதிப்படுத்திக் கொள்வோம். இதில் எனக்கென்று தனி அஜெண்டா கிடையாது. இந்த துறையில் எனக்கு முன்பு இருந்த ஜெயராம் ரமேஷ் சிறப்பாக பணியாற்றியுள்ளார். அவரது செயல்பாட்டுக்கும் எனது செயல்பாட்டுக்கும் முரண்பாடு இருப்பதாக கூறுவது சரியல்ல. சுற்றுச்சூழலை பொறுத்தவரை இந்தியா என்ன நிலைப்பாடு எடுக்க வேண்டும் என்பது பற்றி ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் ஒற்றுமை உள்ளது. எனவே இதில் பிரச்சினை எதுவும் கிடையாது. சுற்றுச்சூழலுக்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் எந்தவித முரண்பாடும் இல்லை. டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதனின் சேவையை பாராட்டி அவருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவிக்க உள்ளது. 

இவ்வாறு அவர் கூறினார். 

தமிழக அரசு எடுக்கும் பல நல்ல திட்டங்களுக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வரும் வேளையில் தினசரி நில ஆக்கிரமிப்பில் சிக்கி கைதாகி வரும் தனது கட்சியினரை பாதுகாக்க தினம் ஒரு அறிவிப்பு , நாளொறு போரட்டம் நடத்தி வரும் கருணாநிதி சகட்டுமேனிக்கு எல்லா திட்டங்களையும் எதிர்த்து வரும்வேளையில் தி.மு.க.வின் கூட்டணி கட்சி காங்கிரஸ்  மத்திய அமைச்சர் தமிழக அரசை பாராட்டி பேசியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago