முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் கர்சாய் பேச்சு

திங்கட்கிழமை, 8 ஆகஸ்ட் 2011      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், ஆக.9 - அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவுடன் ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீது கர்சாய் நேற்று டெலிபோனில் தொடர்பு கொண்டு பேசினார்.  ஹெலிகாப்டர் விபத்தில் 30 அமெரிக்க ராணுவ வீரர்கள் பலியானதற்கு ஒபாமாவிடம் கர்சாய் தனது ஆழ்ந்த இரங்கலை அப்போது தெரிவித்துக்கொண்டார். ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டு படைகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன. ஒசாமா பின்லேடனை பிடிப்பதற்காக ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்த அமெரிக்கா, அந்நாட்டை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

அமெரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

இவர்களை ஒடுக்க அமெரிக்க ராணுவத்தினர்  கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் அமெரிக்க ராணுவ வீரர்கள் சென்ற ஹெலிகாப்டர் ஒன்று நேற்று முன்தினம் கீழே விழுந்து  விபத்துக்குள்ளானது. இதில் 30 அமெரிக்க ராணுவத்தினர் பலியானார்கள்.

இவர்களது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் ஆப்கன் அதிபர் ஹமீது கர்சாய் நேற்று  அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவுடன் தொலை பேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவ வீரர்கள் ஆற்றி வரும் சேவை மகத்தானது என்றும், இந்த ஹெலிகாப்டர் விபத்தில் 30 அமெரிக்க வீரர்கள் பலியானதற்கு தனது சார்பிலும் தனது நாட்டு மக்கள் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் கூறினார்.

தன்னிடம் பேசிய கர்சாய்க்கு ஒபாமா தனது நன்றியை தெரிவித்துக்கொண்டார்.

இந்த தகவலை வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்