முக்கிய செய்திகள்

மூழ்கிய கப்பலில் இருந்து எண்ணை கசிவு குறைந்துள்ளதாக தகவல்

திங்கட்கிழமை, 8 ஆகஸ்ட் 2011      இந்தியா
Image Unavailable

 

மும்பை, ஆக.9 - கடந்த 4 நாட்களுக்கு முன்பு அரபிக்கடலில் மும்பை நகருக்கு அப்பால் காங்கோ நாட்டை சேர்ந்த எம்.வி.ராக் என்ற எண்ணை கப்பல் திடீர் என்று கடலில் மூழ்கியது. இதை அடுத்து அந்த கப்பலில் எண்ணை கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த கப்பலை சுற்றி 7 கடல் மைல் சுற்றளவில் எண்ணை கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டுள்ளதோடு கடல் வாழ் உயிரினங்களுக்கும்  அபாயம் ஏற்பட்டுள்ளது. 

இந்த எண்ணை கசிவை குறைக்க இந்திய கடலோர பாதுகாப்பு படையினர் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக முன்பு இருந்ததை விட இப்போது எண்ணை கசிவு குறைந்துள்ளதாக இந்திய கடலோர பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எண்ணை கசிவு கடலில் எவ்வளவு தூரம் பரவியிருக்கிறது என்பதை கண்டறிய கடலோர காவல் படையை சேர்ந்த ஹெலிகாப்டர் ஒன்று நேற்று காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை பறந்து ஆய்வு செய்தது.

அதன்படி நேற்று முன் தினம் இருந்த பரப்பை விட நேற்று எண்ணை கசிவின் பரப்பு மிகவும் குறைந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

எண்ணை கசிவை தடுக்கும் பணியில் இந்திய கடலோர காவல் படையை சேர்ந்த சமுத்திரா  பிரஹாரி, சங்கல்ப் என்ற இரு கப்பல்கள் ஈடுபட்டு வருகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்: