முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா அமெரிக்காவுக்கு கொடுத்தகடன் கிடைக்குமா?

திங்கட்கிழமை, 8 ஆகஸ்ட் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, ஆக.9 - இந்தியா அமெரிக்காவுக்கு ரூ. 1.83 லட்சம் கோடி கடன் கொடுத்துள்ளது. அமெரிக்கா தற்போது பெரும் பொருளாதார வீழ்ச்சியை கண்டுவருவதால் இந்த பணம் திரும்ப கிடைப்பதில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. 

உலகின் வல்லரசு நாடாக விளங்கிவரும் நாடு அமெரிக்கா. இப்போது இந்த வல்லரசு கடனில் மூழ்கி தத்தளித்து வருகிறது. அந்நாடு பல்வேறு நாடுகளிடம் கடன்பட்டுள்ளது. இந்த பட்டியலில் 1.83 லட்சம் கோடி கடன் கொடுத்து இந்தியா 14 வது இடத்தில் உள்ளது. பிரான்ஸ், ஆஸ்திரேலியா நாடுகளைவிட நாம் அதிகமாக அமெரிக்காவிற்கு கடன் கொடுத்துள்ளோம்.  இந்த பட்டியலில் முதலிடத்தை சீனா பெற்றுள்ளது. 

அமெரிக்காவில் வேலைவாய்ப்பு, தொழில்துறையில் மந்தம் நிலவுகிறது. இதுவே அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய காரணம் என்று கருதப்படுகிறது. அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி இந்தியா போன்ற நாடுகளையும் பாதிக்கும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் அமெரிக்காவிற்கு உள்ள கடன்கள் குறித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி அமெரிக்காவின் மொத்க கடன் 15 லட்சம் கோடியை நெருங்கியுள்ளது. இதில் 4.5 லட்சம் கோடி கடனை அமெரிக்கா வெளிநாடுகளிடம் இருந்து பெற்றுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக ஜப்பான், இங்கிலாந்து, பிரேசில், தைவான், ஹாங்காங், ரஷ்யா, சுவிட்சர்லாந்து, கனடா, லக்ஸம்பர்க், ஜெர்மனி, தாய்லாந்து சிங்கப்பூர் ஆகிய நாடுகள் அமெரிக்காவிற்கு அதிக அளவில் கடன் கொடுத்துள்ளன. 

ஆஸ்திரேலியா, மலேசியா, இஸ்ரேல், பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, அயர்லாந்து தென்கொரியா, போலந்து, பெல்ஜியம், நார்வே உள்ளிட்ட நாடுகளும் அமெரிக்காவுக்கு கடன் கொடுத்துள்ளன. ஆனால் இந்த நாடுகளெல்லாம் இந்தியாவைவிட குறைவாகவே கடன் கொடுத்துள்ளன. அமெரிக்காவுக்கு இந்தியா கொடுத்த கடன் கடந்த ஓராண்டில் மட்டும் 1000 கோடி டாலர் அதிகரித்துள்ளது. அமெரிக்க கடன் பத்திரங்கள், கருவூலப் பத்திரங்களை இந்தியா அதிக அளவில் வாங்கியுள்ளதே இதற்கு காரணம். 

இந்திய ரிசர்வ் வங்கி வைத்துள்ள அன்னியச் செலாவணி கையிருப்பில் அமெரிக்காவின் கருவூலப் பத்திரங்கள் அதிகம் உள்ளன. மேலும் கையிருப்பாக 10 சதவீதம் அமெரிக்க டாலர்கள் உள்ளன. அமெரிக்காவில் பெரும் பொளாதார வீழ்ச்சி ஏற்பட்டாலும் அமெரிக்காவிடம் கடன் பத்திரங்களாக பெற்றுள்ளதால் அந்த பணத்தை திரும்ப பெற்றுவிடலாம் என்று பொருளாதார வல்லுனர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர் 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்