முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீதிமன்றம் உத்தரவுப்படி சமசீர் கல்வியை அமுல்படுத்துவோம்

புதன்கிழமை, 10 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.10 - உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி சமச்சீர் கல்வியை அமுல்படுத்துவோம் என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார். நேற்று சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாகத்தில் கம்யூனிஸ்ட் உறுப்பினர் டில்லிபாபு பேசுகையில், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த ஆன்லைன் வர்த்தகத்தை தடைசெய்ய மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும், தகுதி உள்ள அனைவருக்கும் வீட்டு மனைபட்டா வழங்க வேண்டும், கடந்த தி.மு.க. ஆட்சி காலத்தில் பட்டாவை சரியாக வழங்கவில்லை. அரூர் தொகுதியில் நவீன மருத்துவமனை கட்ட உத்தரவு வழங்கப்பட்டு பென்னாகரம் இடைத்தேர்தல் காரணமாக அந்த மருத்துவமனை இடம்மாறி போய்விட்டது. மீண்டும் அந்த தொகுதியில் மருத்துவமனை கட்ட முதல்வர் ஆணையிட வேண்டும்.

சமச்சீர் கல்வியை நீதிமன்ற உத்தரவுப்படி அமுல்படுத்துவோம் என்று சட்டப்பேரவையில் முதல்வர் கூறினார் என்றார். 

உடனே முதல்வர் ஜெயலலிதா குறுக்கிட்டு, உச்சநீதிமன்றத்தில் இன்று (நேற்று) காலை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்து இருக்கிறார்கள். நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி 10 நாட்களில் சமச்சீர் கல்வியை அமுல்படுத்த தமிழக அரசு உடனடியாக சமச்சீர் கல்வியை செயல்படுத்தும்.இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்