முக்கிய செய்திகள்

ரிசர்வ் வங்கி கவர்னர் பதவிக் காலம் நீட்டிப்பு

புதன்கிழமை, 10 ஆகஸ்ட் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,ஆக.10 - இந்திய தலைமை வங்கியின் கவர்னர் சுப்பாராவ் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு பிரதமர் மன்மோகன் சிங் ஒப்புதல் அளித்துள்ளார். ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருக்கும் சப்பாராவ் பதவிக்காலம் வரும் செப்டம்பர் மாதம் 5-ம் தேதியுடன் முடிவடைகிறது. அவர் ஓய்வு பெறவிருந்தார். ஆனால் அவரது பதவிக்காலத்தை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு பிரதமர் மன்மோகன் சிங் ஒப்புதல் அளித்திருப்பதால் அவர் வரும் 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 4-ம் தேதி முடிய பதவியில் நீடிப்பார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: