முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொடைக்கானல் புனித சலேத் மாதா திருவிழா துவக்கம்

புதன்கிழமை, 10 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

 

கொடைக்கானல்,ஆக.10 - கொடைக்கானல் நூற்றாண்டு பழைமை வாய்ந்தது புனித சலேத்மாதா ஆலயம். உலகிலேயே இது 2 வது ஆலயமாக கருதப்படுகிறது. இதன் 145 வது ஆண்டு விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. புனித சலேத் அன்னையின் திருவுருவ கொடி கொடைக்கானல் மூஞ்சிக்கல் திருஇருதய ஆலயத்தில் இருந்து பங்கு இறை மக்களால் கொடி பவனியாக முக்கிய வீதிகளில் எடுத்து வரப்பட்டது. இதையடுத்து விழா துவக்க கூட்டு திருப்பலி மதுரை மறைமாவட்ட பேராயர் டாக்டர் பீட்டர் பெர்னான்டோ தலைமையில் நடந்தது. கொடைக்கானல் மறை மாவட்ட அதிபர் அப்போலின் கிளாரெட்ராஜ் முன்னிலை வகித்தார். திருப்பலி நிறைவில் பேராயர் அன்னையின் திருவுருவ கொடியை ஏற்றி வைத்தார். கொடியேற்று விழாவை அடுத்து சலேத் அன்னை ஒவ்வொரு நாட்களும் நவநாட்கள் திருப்பலி பூஜைகள் நடைபெறும். 

145 வது ஆண்டு திருவிழா வரும் 14 ம் தேதி மதுரை குருமட அதிபர் அருட்தந்தை டாக்டர் மதுரை ஆனந்த் தலைமையில் கூட்டு திருப்பலி நடைபெறுகிறது. இதையடுத்து சலேத் அன்னையின் திருவுருவ மின் ரத பவனி நடைபெறும். 15 ம் தேதி அன்னையின் விண்ணேற்றம் மற்றும் விடுதலை பெருநாள் விழாவையொட்டி கொடைக்கானல் திரு இருதய ஆலயத்தில் காலை 8.30 மணிக்கு தேசிய கொடியேற்றி திருவிழா திருப்பலியை அருட்தந்தை அமலசேசுராஜா நடத்துகிறார். 15 ம் தேதி சலேத் அன்னை ஆலயத்தில் காலை 5.30 மணிக்கு திருப்பலியை நத்தம்பட்டி பங்கு தந்தை பாரிவளனும், 6.30 மணி திருப்பலியை தாளவாடி நாசரேத் இல்ல உதவி இயக்குனர் அருட் தந்தை லூர்து ராஜூம், 7.30 மணி திருப்பலியை காரியாபட்டி பங்கு தந்தை அந்தோணி முத்தும் காலை 8.30 மணி திருப்பலியை மதுரை மறை மாவட்ட முதன்மை குரு பேரருட்தந்தை ஜோசப் செல்வராஜூம் நடத்துகின்றனர். மாலை 5 மணிக்கு நற்கருணை ஆசிருடன் விழா நிறைவு பெறுகிறது. இந்த விழா மற்றும் தேர் பவனிக்கான ஏற்பாடுகளை வட்டார அதிபரும், பங்கு தந்தையுமான அப்போலின் கிளாரெட்ராஜ் தலைமையில் பங்கு பேரவையினர் விழா குழுவினர் மற்றும் பங்கு மக்கள் செய்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்