முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பழனி மலைக்கோயில் உண்டியல் வசூல் ரூ.1.65 கோடி

வியாழக்கிழமை, 11 ஆகஸ்ட் 2011      ஆன்மிகம்
Image Unavailable

 

பழனி,ஆக.11 - பழனி மலைக்கோயிலில் உள்ள உண்டியல்கள் நிறைந்ததை தொடர்ந்து அவை திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில் காணிக்கையாக செலுத்தப்பட்ட பணம் ரூ. 1.65 கோடியை தாண்டியுள்ளது. ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு பழனி மலைக் கோயிலில் உண்டியல்கள் 40 நாட்களில் நிரம்பியதை தொடர்ந்து அவை கோயில் கார்த்திகை மண்டபத்தில் வைத்து திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. இதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம் ரூ. ஒரு கோடியே 65 லட்சத்து 77 ஆயிரத்து 805 கிடைத்துள்ளது. மேலும் உண்டியலில் தங்கத்தாலான காசுகள், தாலி செயின், வேல், உருவங்களும், வெள்ளியாலான வேல், கொலுசுகள், பார் வெள்ளி, சுவாமி உருவம் போன்றவையும் காணிக்கையாக செலுத்தப்பட்டுள்ளன. 

தங்கம் மொத்தம் 1.035 கிராமும், வெள்ளி 7 ஆயிரத்து 160 கிராமும் கிடைத்துள்ளன. மேலும் மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாட்டு கரன்சிகள் 632 ம் கிடைத்துள்ளன. இவை தவிர ஏராளமான பக்தர்கள் பித்தளை பாத்திரங்கள், பட்டுப் புடவைகள், பரிவட்டங்கள், நவதானியங்கள், கை கெடிகாரங்கள், ஏலக்காய் மாலைகள் ஆகியவற்றையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். உண்டியல் எண்ணிக்கையின்போது பழனி கோயில் இணை ஆணையர் ராஜா, துணை ஆணையர் மங்கையர்கரசி, உதவி ஆணையர் நடராஜன், திண்டுக்கல் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் பச்சையப்பன், கவுன்சிலர் வேலுச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திருக்கோயில் பணியாளர்கள், கல்லூரி மாணவிகள், பழனி பாரத ஸ்டேட் வங்கி, திண்டுக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆகியோர் எண்ணிக்கை பணியில் ஈடுபட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்