முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூடங்குளம் அணுமின் நிலைய மின் உற்பத்தி டிசம்பரில் துவங்கும்

வியாழக்கிழமை, 11 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

 

நெல்லை,ஆக.11 - கூடங்குளம் அணுமின் நிலையம் டிசம்பர் மாதம் மின் உற்பத்தியை தொடங்கும் என்று அணுமின் நிலைய அதிகாரி தெரிவித்தார். நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி மற்றும் பாதுகாப்பு சம்பந்தமான கருத்தரங்கம் நடைபெற்றது. அணுமின் நிலைய வளாக இயக்குனர் காசிநாத்பாலாஜி கருத்தரங்கை துவக்கி வைத்து பேசுகையில், இந்தியாவில் உள்ள அணுமின் நிலையங்களில் கூடங்குளம் அணுமின் நிலையம் முற்றிலும் பாதுகாப்பான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கு தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகளின் கட்டுமானம் முடிவடைந்துள்ளது. 

முதல் அணு உலையின் சோதனை ஓட்டம் முடிவடைந்துள்ளது. அணு உலையின் வெப்பம், அழுத்தம், தாங்கும் திறன் உள்ளிட்ட விளைவுகள் குறித்து கணக்கீடு செய்து அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்துக்கு அறிக்கை தாக்கல் செய்வோம். அதன் பின்னர் ஆணையம் முடிவு செய்யும். ஆய்வுக்கு பின்னர் மின் உற்பத்திக்கு பயன்படும் எரிபொருளான யுரேனியத்தை அணு உலையில் நிரப்புவதற்கு அனுமதி அளிப்பார்கள். இந்த பணி முடிவடைந்து டிசம்பர் மாதம் மின் உற்பத்தி துவக்கப்படும் என்றார். 

முதலில் 15 சதவீதமும், இரண்டாவது 50 சதவீதமும், மூன்றாவது 90 சதவீதமும் மின் உற்பத்தி படிப்படியாக அதிகரிக்கப்படும். இயற்கை சக்திகள் மூலமாக பாதிப்பு ஏற்பட்டால் அணு உலையின் உள்ளே வைக்கப்பட்டிருக்கும் அணு மூலப்பொருட்கள் பூமிக்கு உள்ளே தானாகவே இறங்கி மூடிக்கொள்ளும் வகையில் பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது. ஒன்றாவது அணு உலை பணி முடிந்து மின் உற்பத்தி தொடங்கிய 8 மாதம் கழித்து 2 வது அணு உலையில் மின் உற்பத்தி தொடங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். அதைத் தொடர்ந்து மூன்றாவது, நான்காவது அணு உலைகள் கட்டுமான பணிகள் தொடங்கும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!