முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜூனியர் கைப்பந்து இறுதிச் சுற்றில் ரஷ்யா - அர்ஜென்டினா

வியாழக்கிழமை, 11 ஆகஸ்ட் 2011      விளையாட்டு
Image Unavailable

 

ரியோடி ஜெனிரோ, ஆக. 11 - பிரேசிலில் நடைபெற்று வரும் உலக ஜூனியர் கைப்பந்துப் போட்டி யின் இறுதிச் சுற்றில் பட்டத்தைக் கைப்பற்ற ரஷ்யா மற்றும் அர்ஜென் டினா அணிகள் பலப்பரிட்சை நடத்த இருக்கின்றன. இது பற்றிய விபர ம் வருமாறு -  16 -வது உலக ஜூனியர் கைப்பந்துப் போட்டி பிரேசில் நாட்டில் கடந்த 2 வார காலமாக நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இந் தியா உள்பட 16 நாடுகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. 

இந்திய அணி முதல் சுற்றில் ஜெர்மனி, எகிப்தை வென்றது. ரஷ்யாவி டம் தோற்றது. 2 வெற்றி மூலம் இரண்டாவது சுற்றில் நுழைந்தது. அந்த சுற்றில் அர்ஜென்டினா, செர்பியா அணிகளிடம் தோற்றது. நடப்பு சாம்பியனான பிரேசிலை மட்டும் அதிர்ச்சிகரமாக தோற்கடித்தது. 

ஒரு வெற்றி மட்டுமே பெற்றதால், அரை இறுதி வாய்ப்பை இழந்தது. இதனால் 5 முதல் 8 -வது இடங்களுக்கான ஆட்டத்தில், இந்தியா மோத வேண்டிய நிலை இருந்தது. 

பிரேசில், ஸ்பெயின், ஈரான் ஆகிய அணிகளும் அதே நிலையில் இருந்தன. நேற்றைய ஆட்டத்தில், இந்திய அணி ஈரானை எதிர்கொண்ட து. இதில் இந்தியா 11 - 25, 22 - 25, 21 - 25 என்ற கணக்கில்தோற்றது. 

இந்திய அணி 7 -வது இடத்துக்கான ஆட்டத்தில் ஸ்பெயினுடன் மோ துகிறது. ஸ்பெயின் அணி 20 -25, 25 - 18, 20 - 25, 16 - 25 என்ற கணக்கில் பிரேசிலிடம் தோற்றது. 

5 -வது இடத்துக்கான ஆட்டத்தில் பிரேசில் - ஈரான் அணிகள் மோதுகி ன்றன. பல்கேரியா 13 -வது இடத்தையும், துனிசியா 14 -வது இடத்தை யும், எகிப்து 15 -வது இடதையும் , போர்ட்டோரிகோ கடைசி இடத் தையும் பிடித்தன.

9 - வது இடத்துக்கான ஆட்டத்தில் ஜெர்மனி - பெல்ஜியம் அணிகளும் 11 -வது இடத்துக்கான ஆட்டத்தில் ஜப்பான் - கனடா அணிகளும்  மோத இருப்பது நினைவு கூறத்தக்கது. 

இறுதிச் சுற்றில், ரஷ்யா மற்றும் அர்ஜென்டினா அணிகள் மோதுகின்றன. அர்ஜென்டினா அரை இறுதியில் 27 - 29, 28 - 26, 25 - 19, 25 - 20 என்ற கணக்கில் அமெரிக்காவை வென்றது. 

ரஷ்யா மற்றொரு அரை இறுதியில், 25 - 22, 25 - 15, 23 - 25, 25 - 13 என்ற கணக்கில் செர்பியாவையும் தோற்கடித்தன. 3 -வது இடத்துக்கான ஆட்டத்தில் அமெரிக்கா- செர்பியா அணிகள் மோதுகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago