முக்கிய செய்திகள்

விவசாயத்திற்கு தனி நிதிநிலை அறிக்கை தேவையில்லை

வியாழக்கிழமை, 11 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.11 - விவசாயத்திற்கு என்று தனியாக நிதிநிலை அறிக்கை தேவையில்லை. தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் அறிவித்துள்ள திட்டங்கள் விவசாய துறையை உலக தரத்திற்கு உயர்த்தும் என்று அமைச்சர் செங்கோட்டையன் சட்டப் பேரவையில் கூறினார். தமிழக சட்டமன்றத்தில் 2011-12-ம் ஆண்டுக்கான அறிக்கையின் மீதான விவாதம் 3-வது நாளாக தொடர்ந்தது. இதில் கலந்துகொண்டு பேசிய ஜெயங்கொண்டான் தொகுதி பா.ம.க. எம்.எல்.ஏ. குரு விவசாயத்துறைக்கு என்று தநி நிதிநிலை அறிக்கையை அளிக்க வேண்டும். கர்நாடகாவில் இதேபோன்ற தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. இதன்மூலம் விவசாயம் மேம்படும் என்றார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய வேளாண்துறை அமைச்சர் செங்கோட்டையன் விவசாயத்திற்கு என்று தனியாக நிதிநிலை அறிக்கை தேவையில்லை. இந்த நிதிநிலை அறிக்கையில் அறிவித்திருக்கின்ற திட்டம்  மூலம் உலக தரத்தை எட்டும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு செங்கோட்டையன் பதிலளித்தார்.

மேலும், மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ராமமூர்த்தி பேசும்போது விவசாயிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் விதத்தில் திட்டம் என்ன உள்ளது என்று பேசியபோது, குறுக்கிட்டு பேசிய வேளாண்துறை அமைச்சர் செங்கோட்டையன் பருவநிலைகள் மாறுகின்றபோது விவசாயம் செய்வதில் பெரும் நஷ்டம் ஏற்படுகிறது என்று குறிப்பிட்டு என்ன வென்று கேட்பார். அப்போது வாரியம் பாதுகாப்பு அளிக்கும். அதற்கான இன்ஷூரன்ஸ் உள்ளது. மேலும் தட்ப வெட்ப நிலை அறிந்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கும் திட்டமும் உள்ளது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: