முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமர்நாத்க்கு கடைசி யாத்திரையாக 10 பேர் பயணம்

வெள்ளிக்கிழமை, 12 ஆகஸ்ட் 2011      ஆன்மிகம்
Image Unavailable

ஜம்மு,ஆக.12 - அமர்நாத் பனிலிங்க குகைக்கோயிலுக்கு இந்தாண்டு கடைசியாக 10 பேர் யாத்திரையாக பலத்த பாதுகாப்புடன் நேற்று புறப்பட்டனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இமயமலையில் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 14 ஆயிரம் அடி உயரத்தில் இருக்கும் அமர்நாத் குகைக்கோயிலில் பனிலிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரையாக சென்று வழிபட்டு வருகிறார்கள். இந்த யாத்திரை ஜூன் மாதம் இறுதியில் வழக்கமாக தொடங்கி ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதிக்குள் முடிவடையும். இந்தாண்டு கடந்த ஜூன் மாதம் 29-ம் தேதி தொடங்கியது. யாத்திரை வழிபாடு நாளையுடன் முடிவடைகிறது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதால் யாத்திரையாக செல்லும் பக்தர்களுக்கு மூன்றடக்கு பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்தது. இந்தாண்டு தீவிரவாதிகளின் நடமாட்டம் குறைக்கப்பட்டுவிட்டது. ஆனால் யாத்திரை செல்லும்போது இயற்கை மரணம் அதிகரித்தது. கடைசியாக நேற்று ஆண்கள் 5 பேர், பெண்கள் 3, குழந்தைகள் 2 ஆகியோர் யாத்திரையாக  பலத்த பாதுகாப்புடன் சென்றனர். இவர்கள் ஜம்மு நகரில் உள்ள பகவதி நகர் யாத்ரி நிவாஸ் முகாமில் இருந்து புறப்பட்டனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கோயிலில் கடைசி பூஜை நாளை நடத்தப்படும். நாளை ரக்ஷ பந்தன் விழா தினமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தாண்டு வழக்கத்திற்கும் அதிகமாக பக்தர்கள் சென்று வழிபட்டு வந்துள்ளனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்