முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மோசடி தி.மு.க. வினரை காப்பாற்ற கருணாநிதி முயற்சி

வெள்ளிக்கிழமை, 12 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

 

கோவை, ஆக.12 - தமிழகத்தில் நில அபகரிப்பு புகார்களில் சிக்கி இருக்கும் தி.மு.க.வினரை காப்பாற்ற கருணாநிதி முயற்சி செய்வதாக தமிழ்நாடு மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சியின் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.

கோவை காந்திபுரத்தில் மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் நிருபர்களுக்கு நேற்று பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது; கடந்த தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற நில அபகரிப்பு புகார்கள் குவிந்து வருவதை தொடர்ந்து தமிழக அரசு நிலமோசடி தடுப்பு தனிப்பிரிவு ஒன்று அமைக்கப்பட்டு எடுத்த அதிரடி நடவடிக்கைகளினால் தமிழகத்தில் நிலமோசடி புகார்கள் தெரிவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் உட்பட தி.மு.க.வின் முக்கிய பிரமுகர்கள் கைது செய்ப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த மாதம் கோவையில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் நில அபகரிப்பில் தி.மு.க. வினர் ஈடுபட்டுள்ளனர் என தெரியவந்தால் அவர்கள் மீது தாராளமாக நடவடிக்கை எடுக்கலாம் என்று தீர்மானிம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இப்பொழுது தி.மு.க.வினர் மீது நில அபகரிப்பு வழக்குக்கள் பதிவு செய்வதற்கு தடை விதிக்கவேண்டும் என்று தி.மு.க.சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது எதைக்காட்டுகிறது என்றால் தி.மு.க. தலைவர் கருணாநிதி நிலமோசடி புகார்களில் சிக்கியுள்ள தன்னுடைய சகாக்களை காப்பாற்றவே இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. இது கண்டனத்திற்குரியது ஆகும். 

மேலும் இலங்கை தமிழர்கள் பிரச்சனையில் அவர்களுக்கு நியாயம் எதுவும் கிடைத்தபாடில்லை. ராஜபக்சே போர் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட பிறகும் தமிழர்களுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படாமல் இருப்பது மிகவும் வருந்தத்தக்கது. கடந்த 2010 ம் ஆண்டு முதல் 10 தடவைகளுக்கு மேல் பேச்சுவார்த்தை நடந்து இலங்கை தமிழர்களுக்கு எந்தவித பயனும் இதுவரை கிட்டவில்லை. எனவே இலங்கை தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வும், சம உரிமை வழங்கிடக் கோரியும் வரும் செப்டம்பர் 7 ம் தேதி நாடாளுமன்றம் முன்பாக சி.பி.ஐ.(எம்) சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். 

வரும் ஆகஸ்ட்டு 15 ம் தேதி சுதந்திர தினத்தன்று சென்னையில் சுதந்திர போராட்ட வீரர் சங்கரய்யா தலைமையில் பொதுவாழ்வில் மக்கள் நலனை கருத்தில் கொண்டு உண்மையாக பாடுபடுதல் மற்றும் ஊழலுக்கு எதிரான உறுதிமொழி கட்சியின் சார்பில் ஏற்கப்பட உள்ளது. 

லோக்பால் மசோதாவில் பிரதமரையும் கண்டிப்பாக சேர்க்க வேண்டும் என்று மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி போராடும் என்று ராமகிருஷ்ணன் தெரிவித்தார். 

பேட்டியின்போது திருப்பூர் மாவட்ட செயலாளர் காமராஜ் வெள்ளியங்கிரி, சிவஞானம் ஆகியோர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago