முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல் ஒரு நாள் போட்டி: ஆஸ்திரேலியா வெற்றி

வெள்ளிக்கிழமை, 12 ஆகஸ்ட் 2011      விளையாட்டு
Image Unavailable

 

பல்லேகெலே, ஆக. 12 - இலங்கை அணிக்கு எதிராக பல்லேகெலேவில் நடைபெற்ற முதலாவ து ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்தத் தொடரி ல் 1 - 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று உள்ளது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தரப்பில், துவக்க வீரர் வாட்சன், கேப்டன் மைக்கேல் கிளார்க் மற்றும் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் ஆகியோர் அரை சதம் அடித்து அணியை வெற்றி பெற வை த்தனர். 

முன்னதாக பெளலிங்கின் போது, முன்னணி வேகப் பந்து வீச்சாள ரான ஜான்சன் மின்னல் வேகத்தில் பந்து வீசி 6 முக்கிய விக்கெட்டை க் கைப்பற்றி இலங்கை அணியின் ரன்குவிப்பை கட்டுப் படுத்தினார். பிரட்லீ, பொலிஞ்சர், டொகெர்ட்டி மற்றும் ஜே. ஹஸ்சே ஆகியோர் அவருக்குப் பக்கபலமாக பந்து வீசினர். 

கேப்டன் தில்ஷான் தலைமையிலான இலங்கை அணிக்கும், கேப்டன் மைக்கேல் கிளார்க் தலைமையிலான ஆஸ்திரேலிய அணிக்கும் இடை யே 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடத்த திட்டமிடப்பட்டது. இதன் முதல் போட்டி பல்லேகெலே சர்வதேச அரங்கத்தில் பகலி ரவு ஆட்டமாக நடந்தது. 

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி ஆஸ்தி ரேலிய அணியின் வேகப் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறி யது. இறுதியில், அந்த அணி 41.1 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 191 ரன்னை எடுத்தது. 

இலங்கை அணி சார்பில் பின் வரிசை வீரரான ரன்டிவ் அதிகபட்சமா க, 50 பந்தில் 41 ரன்னை எடுத்தார். இதில் 4 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடக்கம். இறுதியில் அவர், ஜான்சன் வீசிய பந்தில் டொகெர்டியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 

அடுத்தபடியாக, துவக்க வீரர் தரங்கா 28 பந்தில் 34 ரன்னை எடுத்தார். குலசேகரா 57 பந்தில் 34 ரன்னை எடுத்தார். தில்ஷான் 41 பந்தில் 29 ரன்னையும், கீப்பர் சங்கக்கரா 16 ரன்னையும், மேத்யூஸ் 15 ரன்னையு ம் எடுத்தனர். 

ஆஸ்திரேலிய அணி தரப்பில், ஜான்சன் 31 ரன்னைக் கொடுத்து 6 விக் கெட் எடுத்தார். தவிர,  பிரட்லீ, பொலிஞ்சர், டொகெர்டி மற்றும் ஜே. ஹஸ்சே ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். 

ஆஸ்திரேலிய அணி 192 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கை இலங்கை அணி வைத்தது. அடுத்து களம் இறங்கிய ஆஸி. அணி 38.1 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்னை எடுத்தது. 

இதனால் ஆஸ்திரேலிய அணி இந்த முதல் போட்டியில் 71 பந்து மீதமி ருக்கையில் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இத ன் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 1 -0 என்ற கணக்கி ல் முன்னிலை பெற்று உள்ளது. 

ஆஸ்திரேலிய அணி சார்பில், துவக்க வீரர் வாட்சன் 51 பந்தில் 29 ரன் னை எடுத்தார். கேப்டன் மைக்கேல் கிளார்க் 78 பந்தில் 53 ரன்னை எ டுத்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். முன்னாள் கேப்ட ன் பாண்டிங் 71 பந்தில் 53 ரன்னை எடுத்தார். 

இலங்கை அணி தரப்பில், சுழற் பந்து வீச்சாளர் ரன்டிவ் 44 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். டபிள்யு. மென்டிஸ் 32 ரன்னைக் கொ டுத்து 1 விக்கெட் எடுத்தார். குலேசேகரா மற்றும் லக்மல் ஆகியோர் ஏமாற்றம் அளித்தனர். இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக ஜான்ச ன் தேர்வு செய்யப்பட்டார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்