முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அனிதா ராதாகிருஷ்ணன் திருச்சி சிறையில் அடைப்பு

வெள்ளிக்கிழமை, 12 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

 

திருச்சி.ஆக.12 - தூத்துக்குடி கைதான திமுக கழக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் நேற்று திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியில் கடந்த மார்ச் மாதம் 1ந்தேதி மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட ஆறுமுகநேரி நகர செயலாளர் சுரேஷ் விழா முடிந்து மேடையை விட்டு இறங்கி சென்றார். அப்போது 2 பேர் சுரேசை மறித்து கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றனர்.

இது தொடர்பாக ஆறுமுகநேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் அதேபகுதியை சேர்ந்த சசிக்குமார் என்பவர் கோர்ட்டில் சரண் அடைந்தார். மேலும், இந்த வழக்கு தொடர்பாக மணிகண்டன் என்பவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் சசிக்குமார் கடந்த ஜூலை மாதம் 10ம் தேதி கொலை செய்யப்பட்டார். இதில் ஆறுமுகநேரி நகர திமுக செயலாளர் கா.மு.சுரேஷ் உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர். அப்போது சுரேஷ் அளித்த வாக்குமூலத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் தூண்டுதலின்பேரில் என்னை சசிக்குமார் கொலை செய்ய முயன்றார். அதனால் சசிக்குமாரை கொலை செய்தோம் என்று தெரிவித்து இருப்பதாக தெரியவருகிறது.

இதை தொடர்ந்து சுரேசை கொலை செய்ய தூண்டியதாக அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ மீது போலீசார் வழக்கு பதிவி செய்தனர். நேற்று முன்தினம் மதியம் தூத்துக்குடி டூவிபுரத்தில் உள்ள வீட்டில் அனிதா ராதாகிருஷ்ணன் இருந்தார். அப்போது தூத்துக்குடி கூடுதல் போலீஸ் சூப்பிரெண்டு சாமிதுரைவேலு தலைமையில் துணை போலீஸ் சூப்பிரெண்டுகள் ஸ்டீபன் ஜேசுபாதம் (ஸ்ரீவைகுண்டம்), சாகுல் அமீது (விளாத்திகுளம்) சிலம்பரசன் (கோவில் பட்டி) மற்றும் போலீசார் மாலை 6.30 மணி அளவில் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் வீட்டிற்கு சென்றனர்.

அனிதா ஆர்.ராதாகிருஷ்ணனை கைது செய்து வேனில் ஏற்றிக்கொண்டு சென்றனர். இதனால் அங்கு திரண்டு இருந்த கட்சியினரிடையே பதற்றம் ஏற்பட்டது. இந்த வழக்கில் இவரது ஆதரவாளர் ஆல்நாத்(40) என்பவரும் கைதானார்.

தொடர்ந்து அங்கு இருந்து தூத்துக்குடி சிப்காட் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். மீண்டும் வேனில் ஏற்றி 6.30 மணியளவில் ஸ்ரீவைகுண்டம் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். பின்னர் இரவு 7.40 மணிக்கு திருச்செந்தூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

முதலில் திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்து அனிதை ராதாகிருஷ்ணனிடம் விசாரணை நடைபெற்றது. அதனை தொடர்ந்து திருச்செந்தூரில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் nullnullநீதிமன்ற nullநீதிபதி மு.பிரீதா முன்னிலையில் இரவு 11 மணியளவில் அவர் ஆஜர் படுத்தப்பட்டார். பின்னர் அவரை 14 நாட்கள் காவலில் வைக்க nullநீதிபதி உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து அனிதா ராதாகிருஷ்ணன் பாளையங்கோட்டை சிறைக்கு நள்ளிரஉவ 1 மணிக்கு அழைத்து வரப்பட்டார். நிர்வாக காரணங்களுக்காக பின்னர் அவர் நள்ளிரவு 2 மணிக்கு மேல் திருச்சி சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்கப்படுவார் என்று சிறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பின்னர் nullநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இருவரையும் 15 நாள் காவலில் வைக்க nullநீதிபதி உத்தரவிட்டார். இதன்படி நேற்று முன்தினம் நள்ளிரவில் பாளையங்கோட்டையில் போலீஸ் வாகனத்தில் திருச்சிக்கு கொண்டு வரப்பட்ட அனிதா ராதாகிருஷ்ணனும், ஆல்நாத்தும் நேற்று காலை 6.35 மணிக்கு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

அனிதை ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ மீது 341 வழிமறித்து தாக்குதல், 307 கொலை முயற்சி, 120 பி கொலை செய்ய தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்