முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாகை மாவட்டம் மாணவர்களுக்கு ஜெயலலிதா நிதியுதவி

வெள்ளிக்கிழமை, 12 ஆகஸ்ட் 2011      அரசியல்
Image Unavailable

சென்னை, ஆக.12 - கல்லூரியில் படிக்க நாகை மாவட்ட மாணவர்கள் இரண்டு பேருக்கு முதல்வர் ஜெயலலிதா நிதியுதவி வழங்கினார். இதுகுறித்து அ.தி.மு.க. தலைமை கழகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க. பொதுச் செயலாளர், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று, நாகப்பட்டினம் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் மாவட்டத்திலேயே முதல் மாணவனாக தேர்ச்சி பெற்ற நாகப்பட்டினம் தாலுகா, கீச்சாங்குப்பம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த ஏழ்மை நிலையில் உள்ள மாணவன் எம். தங்கவடிவேலு பொறியியல் கல்வி பயில்வதற்கு புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அறக்கட்டளையில் இருந்து முதல் வருடம் கல்லூரிக்குச் செலுத்த வேண்டிய 52,780/-​ ரூபாய்க்கான வரைவோலையை நேரில் வழங்கி, அம்மாணவன் நல்ல முறையில் கல்வி பயில தமது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். 

நாகப்பட்டினம் மாவட்டம், நாகப்பட்டினம் தாலுகா, கீச்சாங்குப்பம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த முருகையன் என்பவர், தான் மீன்பிடி தொழில் செய்து வருவதாகவும், தனது மகன்  தங்கவடிவேலு பிளஸ்  2 தேர்வில் மாவட்டத்திலேயே முதல் மாணவனாக தேர்ச்சி பெற்று பொறியியல் கல்லூரியில் படிப்பதற்கு இடம் கிடைத்திருப்பதாகவும் தெரிவித்து, தனது குடும்பம் ஏழ்மை நிலையில் இருப்பதால் கல்விக் கட்டணம் செலுத்த வேண்டி, கழகப் பொதுச் செயலாளர், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு கடிதம் மூலம் வேண்டுகோள் வைத்திருந்தார்.

முருகையன் வேண்டுகோளை கனிவுடன் பரிசீலித்த கழகப் பொதுச் செயலாளர், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, அம்மாணவன் உள்ளிட்ட குடும்பத்தினரை நேரில் வரவழைத்து,  எம்.ஜி.ஆர். அறக்கட்டளையில் இருந்து முதல் வருடத்திற்கான கல்வி மற்றும் விடுதிக் கட்டணமாக கல்லூரிக்குச் செலுத்த வேண்டிய 52,780/-​ ரூபாய்க்கான வரைவோலையை வழங்கி, மாணவன் தங்கவடிவேலு ஊக்கத்துடன் கல்வி பயின்று சாதனை படைக்க தமது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

கல்வி நிதி உதவியினைப் பெற்றுக்கொண்ட மாணவன் தங்கவடிவேலு மற்றும் அவரது குடும்பத்தினர், கட்சியின் பொதுச் செயலாளர், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தங்களது மனமார்ந்த நன்றியினை நெஞ்சம் நெகிழ தெரிவித்துக் கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்