முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏரிகள் - கால்வாய்கள் நவீனபடுத்தப்படும்: முதல்வர்

வெள்ளிக்கிழமை, 12 ஆகஸ்ட் 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை,ஆக.12 -  திருவள்ளூர் - காஞ்சிபுரம் - திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள நீர் வழங்கும் ஏரிகள், கால்வாய்களை ரூ.116 கோடியில் புரனமைத்து நவீனபடுத்திட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.  4 வது நாளாக தமிழக சட்டபேரவையில் 2011- 2012 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையின் மேல் விவாதம் நடைபெற்றது.  இதில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண். 110​ன் கீழ் தமிழக முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:

தமிழ்நாட்டில் பெரும்பாலான மக்கள் வேளாண்மைத் தொழிலையே நம்பி இருப்பதால், வேளாண் பெருமக்கள் வாழ்வில் வளம் பெறவும், அவர்களின் வாழ்வாதாரம் செழிக்கவும், வேளாண் உற்பத்தித்திறனையும், வேளாண் பெருமக்களின் வருமானத்தையும் அதிகப்படுத்துவதற்கான பல்வேறு திட்டங்களை எனது தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது.  நீடித்த வேளாண் வளர்ச்சியை அடைவதில் பாசனத்திற்கான நீர்வள அமைப்புகளை வலுப்படுத்துதல் இன்றியமையாதது ஆகிறது. 

அந்த வகையில், மாநிலத்தில் பாசன நிலங்களுக்கு ஆதாரமாக உள்ள பாசன உள்கட்டமைப்புகளை நவீனப்படுத்தி பாசனக் கால்வாய் அமைப்புகளைப் புனரமைத்து அவைகளை பழைய நிலைக்குக் கொண்டு வரும் நோக்கத்துடன் உலக வங்கி உதவியுடன் நீர்வள ஆதார தொகுப்புத் திட்டம் என்னுடைய முந்தைய ஆட்சிக் காலத்தில் செயல்படுத்தப்பட்டது.  இந்தத் திட்டத்தின் தொடர் திட்டமாக, தமிழ்நாடு நீர்வள நிலவளத் திட்டம், உலக வங்கி நிதியுதவியுடன்,  2,547 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 15 லட்சத்து 24 ஆயிரத்து 607 ஏக்கர் பாசனப் பரப்பு பயனடையும் வகையில், நீர்வள ஆதாரத் துறை, வேளாண்மைத் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, மீன்வளத் துறை, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், தோட்டக்கலைத் துறை, வேளாண்மைப் பொறியியல் துறை மற்றும் வேளாண்மை விற்பனைத் துறை ஆகிய துறைகளை ஒருங்கிணைத்து விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படும் வகையில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டமாகும்.   

தமிழகத்தில் உப வடிநில கட்டமைப்பு முறையில் ஒருங்கிணைந்த நீர்வள ஆதார மேலாண்மையின் மூலம் பாசன நீர் வழங்கும் சேவை மற்றும் பாசன நில வேளாண் உற்பத்தித் திறன் ஆகியவற்றை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.  தெரிவு செய்யப்பட்ட 60 உப வடிநிலங்களின் 15 லட்சத்து 24 ஆயிரத்து 607 ஏக்கர் பாசனப் பரப்பு அடங்கிய பாசன அமைப்புகளை நவீனப்படுத்துவதன் மூலம் பெருமளவு நீர் விநியோகத்தினை மேம்படுத்த இத்திட்டம் முனைகிறது.  மேலும், 4,848 ஏரிகள், 668 அணைக்கட்டுகள் மற்றும் 7,893 கிலோ மீட்டர் நீர் வழங்கு கால்வாய்களை புனரமைத்து சீர்படுத்துவதன் மூலம் ஏரிப் பாசன முறையை நவீன மயமாக்குதல் மற்றும் கால்வாய்ப் பாசன அமைப்பை மேம்படுத்துதல் போன்ற பணிகள் இத்திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகின்றன.  

இத்திட்டத்தில், நீர் மேலாண்மை மூலம் அதிக மகசூல் பெறத் தக்க வகையில் தேவையான ரை மட்டுமே பயன்படுத்தி மீதமாகும் நீரை அதிக பாசனப் பகுதிகளுக்கு அளித்து வேளாண் உற்பத்தித் திறன் அதிகரிக்கப்படுகிறது.  மேலும், நீரை பயன்படுத்துவோர் மூலமாக ர்பாசனச் சங்கங்கள் அமைத்து அவர்களின் ஈடுபாட்டுடன் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு நீர்வள நிலவளத் திட்டத்தின் ஒரு அங்கமாக, காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள அடையாறு உப வடிநிலத்தின் கீழ் உள்ள முறைசார்ந்த மற்றும் முறைசாரா ஏரிகள், அதாவது, ​நநீஙூசிடீஙி ஹடூக்ஷ சச்டூ நநீஙூசிடீஙி பஹடூகூஙூ ​ மற்றும் நீர்வழங்கு கால்வாய்களை 31 கோடியே 19 லட்சத்து 31 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைத்து நவீனபடுத்திட நிர்வாக ஒப்புதல் அளித்து நான் ஆணையிட்டுள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

அடையாறு உப வடிநிலத்தின் கீழ் உள்ள ஆயக்கட்டு நிலங்களுக்கு நீர் வழங்கும் முறையை 

செம்மையாக்க, அதன் கட்டமைப்பை நவீனப்படுத்த பின்வரும் பணிகள் இத்திட்டத்தில் எடுத்துக் கொள்ளப்படும்:​ ஏரிகளின் கரைகளை இயந்திரங்களைக் கொண்டு பலப்படுத்துதல், பழுதுபட்ட மதகுகளை மறு கட்டமைப்பு செய்தல், பழுதுபட்ட சிற்றணைகளை மறு கட்டமைப்பு செய்தல், நீர்வழங்கு கால்வாய்களை இயந்திரங்கள் கொண்டு துர்வாருதல்,ஏரிகளின் எல்லைகளில் எல்லைக் கற்களை அமைத்தல்,பாசன கால்வாய்களில் ர் அளவீட்டு கட்டமைப்பு ஏற்படுத்துதல் இரண்டு ஏரிகளின் தெரிவு செய்யப்பட்ட வரத்துக் கால்வாய்களில் 600 மீட்டர் நீளத்திற்கு அக உறை அமைத்தல், அதாவது 4 எம்.என்.சி அமைத்தல் மற்றும் மற்ற ஏரிகளின் கால்வாய்களில் 30 முதல் 50 மீட்டர் ளத்திற்கு அக உறை அமைத்தல்,இதனால், காஞ்சீபுரம் மாவட்டத்திலுள்ள செங்கல்பட்டு, தாம்பரம் மற்றும் ஸ்ரீபெரும்புதுர் வட்டங்கள் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருவள்ளூர் மற்றும் ந்தமல்லி வட்டங்களிலுள்ள முறைசார்ந்த மற்றும் முறைசாரா ஏரிகளின் கீழ் உள்ள 45,597.10 ஏக்கர் ஆயக்கட்டு நிலங்களின் பாசன வசதி மேம்பாடு அடையும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாடு நீர்வள நிலவளத் திட்டத்தின் மற்றொரு அங்கமாக, காஞ்சீபுரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள கிளியாறு உப வடிநிலம் மற்றும் செய்யாறு உப வடிநிலத்தின் ஒரு பகுதியின் கீழ் உள்ள ஏரிகள், அணைக்கட்டுகள் மற்றும் நீர்வழங்கு கால்வாய்களை 84 கோடியே 88 லட்சத்து 97 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைத்து நவீனபடுத்திட நிர்வாக ஒப்புதல் அளித்து நான் ஆணையிட்டுள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.  செய்யாறு​கிளியாறு உப வடிநிலத்தின் கீழ் உள்ள ஆயக்கட்டு நிலங்களுக்கு நீர் வழங்கும் முறையை செம்மையாக்க, அதன் கட்டமைப்பை நவீனப்படுத்த, பின்வரும் பணிகள் இத்திட்டத்தில் எடுத்துக் கொள்ளப்படும்:​ நீர்வழங்கு கால்வாய்களை இயந்திரங்கள் கொண்டு தூர்வாரி மேம்படுத்துதல் மற்றும் 200 மீட்டர் இடைவெளிகளில் மாதிரி கால்வாய் வடிவம், அதாவது கடுடூடுடூகி அமைத்தல் ,பழுதுபட்ட சிற்றணைகளை புன ரமைத்தல்,பழுதுபட்ட மதகுகளை மறு கட்டமைப்பு செய்தல்,பழுதுபட்ட மதகுகளை புனரமைத்தல்

பாசன ஏரிகளின் மதகுகளுக்கு கீழ் உள்ள ர்வழங்கு கால்வாய்களில் 35 மீட்டர் தூரத்திற்குத் தேவையான அக உறை அமைத்தல்,எல்லா மதகுகளின் வெளிப்புறங்களிலும் நீர் அளவீட்டு அமைப்பு கட்டமைப்பை ஏற்படுத்துதல்,தேவைப்படும் ஏரிகளின் மதகுகளின் இடது வலது புறங்களில் பாதுகாப்பு அமைப்புகளை ஏற்படுத்துதல் மற்றும் அதன் கரைகளில் 500 மீட்டர் இடைவெளிகளில் மாதிரி கால்வாய் வடிவம் அமைத்தல் மதகுகளுக்கு திருகு அமைப்பு கொண்ட கதவுகள் அமைத்தல்,ஏரிகளின் நீர் பரப்பு பகுதிகளில் எல்லைக் கற்களை நடுதல் மேற்கண்ட இந்தப் பணிகளை மேற்கொள்வதன் மூலம், காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள அச்சரப்பாக்கம், மதுராந்தகம், சித்தாமூர், உத்திரமேரூர் மற்றும் காஞ்சீபுரம் ஆகிய ஒன்றியங்கள் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வெம்பாக்கம், செய்யாறு, அன்னக்காவூர், வந்தவாசி, பெரணமல்லூர், தெள்ளாறு மற்றும் மேற்கு ஆரணி ஆகிய ஒன்றியங்களில் உள்ள 453 ஏரிகள் மற்றும் இரண்டு அணைக்கட்டுகளின் கீழுள்ள 91,081.25 ஏக்கர் ஆயக்கட்டு நிலங்களின் பாசன வசதி மேம்பாடு அடையும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்