கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு

வெள்ளிக்கிழமை, 12 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

 

நெல்லை ஆக-12 - கூடன்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அப்பகுதியில் கடைகளும் அடைக்கப்பட்டன. நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷ்யநாட்டு தொழில்நுட்பத்துடன் அணுமின்நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. முதலாவது அணுஉலையில் விரைவில் மின்உற்பத்தி துவங்கும் என்று

 அணுமின்நிலைய நிர்வாகிகள் தெரிவத்து வருகின்றனர். ஆனால் ஆரம்பத்திலிருந்தே அப்பகுதியில் 

அணுமின்நிலையம் அமைப்பதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே ஜப்பான் நாட்டில் ஏற்பட்ட சுனாமியால் புகுஷிமா நகரில் உள்ள அணுமின்நிலையம் சேதமடைந்ததால் அங்குள்ள மக்கள் கதிர்வீச்சால் பாதிக்ப்பட்டுவருகின்றனர். இச்சம்பவத்துக்கு பிறகு கூடன்குளம் பகுதியில் அமைக்கப்பட்டுவரும் அணுமின்நிலையத்து எதிர்ப்பு வலுத்து வருகிறது. மேலும் மக்கள் உரிமை பாதுகாப்பு இயக்கம்  கூடன்குளத்தில் அணுமின்நிலையம் அமைப்பதற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகிறது. அந்த அமைப்பு பகுதி மக்களை ஒன்று திரட்டி தொடர்ந்து போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வருகிறது. இந்நிலையில் நேற்று மக்கள் உரிமை பாதுகாப்பு இயக்கம் சார்பில் அணுமின்நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் காவல்துறை ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்கவில்லை. அதையும் மீறி அறிவிக்கப்பட்டபடி கூடங்குளம் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் 2ஆயிரத்திற்கும் அதிகமானோர் அங்கு திரண்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவியது. பொதுமக்களின் போராட்டத்திற்கு ஆதரவாக அப்பகுதி முழுவதும் கடைகளும் அடைக்கப்பட்டன. இதனைத்தொடர்ந்து எஸ்.பி.விஜயேந்திர பிதரி தலைமையில் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் பொதுமக்களுக்கு கலந்தாய்வு கூட்டம் நடத்த மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டதித்ல ஈடுபடுவதை நிறுத்திக்கொண்டனர். மேலும் கலந்தாய்வு கூட்டத்தில் பொதுமக்கள் கேட்கும் கேள்விகளுக்கு அணுமின்நிலைய அதிகாரிகள் எழுத்துபூர்வமாக பதில் அளிக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கை ஏற்றுகொள்ளப்பட்டதை தொடர்ந்து பொதுமக்களின் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: