முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பர்மிங்ஹாம் டெஸ்ட் - இக்கட்டான நிலையில் இந்திய அணி

வெள்ளிக்கிழமை, 12 ஆகஸ்ட் 2011      விளையாட்டு
Image Unavailable

 

பர்மிங்ஹாம் , ஆக. 12 - இங்கிலாந்து அணிக்கு எதிராக பர்மிங்ஹாமில் நடைபெற்று வரும் மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு மீண்டு ம் இக்கட்டான நிலை ஏற்பட்டு உள்ளது. கடந்த 2 டெஸ்ட் போலவே இந்த டெஸ்டிலும் தடுமாறி வருகிறது. 

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 224 ரன்னை எடுத்து இருக்கிறது. தோனி, காம்பீர், லக்ஷ்மண் தவிர, மற்ற வீரர்கள் ஏமாற்ற ம் அளித்தனர். 

இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப் பந்து வீச்சாளர்களான பிராட் மற்றும் பிரஸ்னன் இருவரும் சிறப்பாக பந்து வீசி தலா 4 விக்கெட் எடுத்தனர். அவர்களுக்கு பக்கபலமாக பந்து வீசிய ஆண்டர்சன் 2 விக் கெட் எடுத்தார். 

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 -வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி பர்மிங்ஹாம் நகரில் உள்ள எட்க்பாஸ்ட ன் நகரில் கடந்த 2 நாட்களாக நடந்து வருகிறது. 

இந்தப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங் கியது. ஆனால் இங்கிலாந்து அணியின் வேகப் பந்து வீச்சை இந்திய அணி வீரர்களால் சமாளிக்க முடியவில்லை. இதில் கேப்டன் தோனி மட்டும் தாக்குப் பிடித்து ஆடி அரை சதம் அடித்தார். 

இந்திய அணி இறுதியில், 62.2 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 224 ரன்னை எடுத்தது. இந்திய அணி தரப்பில், ஒரு வீரர் அரை சத மும், 3 வீரர்கள் கால் சதமும் அடித்தனர். 

கேப்டன் தோனி அதிகபட்சமாக 96 பந்தில் 77 ரன்னை எடுத்தார். இதி ல் 10 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் அடக்கம். தவிர, காம்பீர் 64 பந்தில் 38 ரன்னையும், லக்ஸ்மண் 41 பந்தில் 30 ரன்னையும், பிரவீன் குமார் 39 பந்தில் 26 ரன்னையும், டிராவிட் 22 ரன்னையும் எடுத்தனர். 

இங்கிலாந்து அணி தரப்பில், முன்னணி வேகப் பந்து வீச்சாளரான பிராட் 53 ரன்னைக் கொடுத்து 4 விக்கெட் எடுத்தார். பிரஸ்னன் 62 ரன் னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். தவிர, ஆண்டர்சன் 69 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். 

பின்பு முதல் இன்னிங்சைத் துவக்கிய இங்கிலாந்து அணி இந்திய பந்து வீச்சை எளிதாக சமாளித்து ரன்னைக் குவித்து வருகிறது. இதனால் இந்தப் போட்டியிலும் இந்திய அணிக்கு இக்கட்டான நிலை ஏற்பட்டு உள்ளது. 

2 - வது நாளான நேற்று இங்கிலாந்து அணி மதிய உணவு இடைவேளையின் போது, 47 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 157 ரன்னை எடுத்து இருந்தது. அப்போது, கேப்டன் ஸ்ட்ராஸ் 84 ரன்னுடனும், குக் 51 ரன் னுடனும் களத்தில் இருந்தனர். 

பின்பு ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் அந்த அணி 58.5 ஓவரில் 200 ரன்னைக் கடந்தது. 59.4 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 207 ரன் னை எடுத்து இருந்தது. கேப்டன் ஸ்ட்ராஸ் 87 ரன் எடுத்த நிலையில் மிஸ்ரா வீசிய பந்தில் ஆட்டம் இழந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்