முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொட்டு சுரேஷ் மீது கொலை வழக்கு பதிவு

வெள்ளிக்கிழமை, 12 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,ஆக.12 - கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் எஸ்ஸார் கோபி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பொட்டு சுரேஷ் மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். மதுரையை சேர்ந்தவர் எஸ்ஸார் கோபி. இவர் திமுக தலைமை செயற்குழு உறுப்பினராக உள்ளார். மேலும் மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கு நெருக்கமாகவும் இருந்து வந்தார். இவர் நில அபகரிப்பு, வீடு அபகரிப்பு, கொலை செய்தது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 2009 ம் ஆண்டு மதுரை வில்லாபுரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பாண்டியராஜன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது விபத்தாக அப்போது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் பாண்டியராஜனின் மனைவி, முன்விரோதத்தில் தனது கணவரை யாரோ காரை ஏற்றி கொலை செய்யது விட்டார்கள் என்று புகார் கொடுத்தார். இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி எஸ்ஸார் கோபி உள்பட 13 பேரை கைது செய்தனர். இந்த நிலையில் இந்த கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த எஸ்ஸார் கோபியை போலீஸ் காவலில் ஒரு நாள் மட்டும் விசாரிக்க மதுரை 6வது மாஜிஸ்திரேட் சுஜாதா அனுமதி அளித்தார்.

    இதையடுத்து எஸ்ஸார் கோபியை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர். அவனியாபுரம் போலீஸ் நிலையத்தில் வைத்து  போலீசார் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பதிவு செய்து கொண்டனர்.  அப்போது திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பொட்டு சுரேஷ் தூண்டுதலின் பேரில்தான் ஆட்டோ டிரைவர் பாண்டியராஜனை கொலை செய்தேன் என்று கூறியதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த வாக்குமூலத்தை தொடர்ந்து பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையில் இருக்கும் பொட்டு சுரேஷ் மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்தனர். இது குறித்து விசாரணை நடத்துவதற்காக  பொட்டுசுரேசை போலீஸ் காவலில் எடுக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்