முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொழில்நுட்ப பூங்கா பணிகளை விரைவுபடுத்த வேண்டுகோள்

வெள்ளிக்கிழமை, 12 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.12 - கடந்த தி.மு.க. ஆட்சியில் கைவிடப்பட்ட நாங்குனேரி தொழில்நுட்ப பூங்கா பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று சட்டசபையில் சரத்குமார் வேண்டுகோள் விடுத்தார். தமிழக அரசு 2011-12-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு சரத்குமார் பேசியதாவது:-

தென்காசியை தலைநகராகக் கொண்டு நெல்லை மாவட்டத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை பகுதி மக்களிடம் நீண்ட நாட்களாக இருந்து வருகிறது.

தென்காசி தொகுதியில், மருத்துவக்கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரி ஒன்றை ஏற்படுத்த வேண்டும்.

தென்காசியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் அமைக்கப்பட வேண்டும்.

நெல்லை - தென்காசி சாலையை 4 வழிச்சாலையாக மாற்றுவதற்குரிய பணிகளை விரைவில் தொடங்கிட வேண்டும்.

தென்காசி தொகுதியில் விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களை பாதுகாத்து, நல்ல விலை கிடைக்கும்போது விற்பனை செய்ய ஏதுவாக, குளிர்சாதனக் கிடங்கு அமைத்திட வேண்டும்.

சுரண்டை அரசுக் கலைக் கல்லூரியை, தயாராக இருக்கும் சொந்தக் கட்டிடத்தில்  இயங்க உத்தரவிட வேண்டும்.

சுரண்டையில் பாதாள சாக்கடைப் பணிகளை தீவிரப்படுத்தி, சுரண்டை நகரின் மத்தியில், சென்னை கூவ நதிபோல் ஓடிக்கொண்டிருக்கும், செண்பகக் கால்வாயை சீரமைக்க வேண்டும்.

குற்றாலத்தில் சித்த மருத்துவக் கல்லூரி ஒன்றை உருவாக்கிட, முதல்வர் ஜெயலலிதாவின் நல்லரசு, புதிய அறிவிப்பை வெளியிட வேண்டும்.

தென் மாவட்டங்களில் புதிய தொழிற்சாலைகளை உருவாக்கிட வழிகாண வேண்டும். கடந்த மைனாரிட்டி தி.மு.க. அரசு, அறிவிப்போடு நிறுத்திவிட்ட நாங்குனேரி தொழில்நுட்ப பூங்கா பணிகளை விரைவுபடுத்திட வேண்டும்.

தமிழகத்தில் உள்ள நதிகளை இணைப்பதற்கான முயற்சிகளில் நாம் மிகுந்த கவனம் செலுத்திட வேண்டும்.

முல்லைப் பெரியார் பிரச்சனையில் தமிழகத்தின்  உரிமையை தொடர்ந்து நிலைநாட்டிட வேண்டும்.

இவ்வாறு சரத்குமார் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்