முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாலாற்றின் குறுக்கே தடுப்பணை: வைகோ

வெள்ளிக்கிழமை, 12 ஆகஸ்ட் 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை, ஆக.12 -   பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி பருவகாலங்களில் நீரை தேக்கி திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நிலங்கள் விவசாயத்திற்கும் சென்னை பகுதியில் குடிநீருக்கும் பயன்படுத்தலாம் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வை.கே தெரிவித்துள்ளார். இது குறித்து வை.கோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் சென்னை கேசவமலைத் தொகுப்பு, 78 நந்திதுர்கம் தான் பாலாற்றின் நதி மூலம். அம்மாநிலத்தில் 90 கி.மீ. தூரம் ஓடி ஆந்திர மாநிலத்தின் வழியாக 45 கி.மீ. கடந்து தமிழ்நாட்டில் 225 கி.மீ. தூரம் ஓடி காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றம் தாலுக்கா, கல்பாக்கம் அணுமின் நிலையம் அடுத்த வாயலூர் ஊராட்சியில் வங்காள விரிகுடா கடலில் கலக்கின்றது.

ஆசிய கண்டத்திலேயே மிகப் பழமையான ஆறுகளில் முதன்மையானது பாலாறு. ஒரு ஆற்றின் ஆயுளை கணக்கிடுபவர் அந்த ஆற்றுப்படுகையில் சேர்ந்துள்ள மணலின் அளவை கொண்டே கணக்கிடுவர். ஒரு அடி மணல் உருவாக வேண்டும் என்றால் சில நூறு ஆண்டுகள் தேவைப்படும், அப்படி என்றால் 30 அடிக்கு மேல் பாலாற்றில் மணல் தேங்கி உள்ளது என்றால் இதனுடைய ஆயுள் தொன்மையானது ஆகும்.

பருவ காலங்களில் பெய்யும் மழையே இதன் நீர் ஆதாரம். பாலாற்றில் ஆண்டு முழுவதும் வெள்ளம் கரைபுரண்டு ஓடாவிடினும், தொட்டனைத்தூறும் மணற்கேணி என்ற வள்ளுவனின் குறட்பாவிற்கு எடுத்துக்காட்டாக பாலாற்றின் வெண்ணிற மணற்பரப்பின் கீழே என்றும் வற்றாத ஜீவ ஊற்றாக ஓடுவதால் தஞ்சைக்கு நிகராக நெல்லுக்கு அடுத்து தென்னை, வாழை, கரும்பு, மணிலா, எள்ளு, சோளம், கம்பு என்று விவசாயத்தில் வடதமிழ்நாட்டு மக்கள் மறுமலர்ச்சி கண்டனர்.

விஞ்ஞான உலகில் நிலவில் கால்பதித்திருக்கும் நம்மால் ஒரு குவளை நீரையோ, ஒருபிடி மணலையோ நம்மால் உருவாக்க முடியாது. எனவே இயற்கையின் அருட்கொடையான பழம்பெருமை கொண்ட பாலாற்றை பாதுகாக்க வேண்டிய கடமை நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு. கடல்நீர் மட்டம் உயர்ந்து கொண்டு வரும் நிலையில் வரையறை செய்து அனுமதிக்கப்பட்ட அளவான 3 அடிக்கு மணல் அள்ளப்பட வேண்டிய இடத்தில் 25 அடிக்கும் மேலாக வரம்புக்கு மீறி மணல் அள்ளப்படுவதைத் தடுக்க மாநில அரசு கண்காணித்து ஒழுங்குபடுத்தப்பட வேண்டும். இல்லை என்றால் கடல் நீர் பாலாற்றின் வழியாக உள்ளே புகுந்து பேராபத்தை விளைவித்து விடும். எனவே பொதுப்பணித்துறை மூலமாக பறந்து விரிந்த பாலாற்றின் இருகரைகளையும் அளந்து பாரபட்சமின்றி ஆக்கிரமிப்புகளை அகற்றி எல்லையை வரையறை செய்து காணிக் கல் அமைத்து தேவைப்படும் இடங்களில் கான்கிரிட் சுவர் எழுப்பி பாதுகாக்கப்பட வேண்டும்.

தொழிற்சாலைகளின் சுத்திகரிக்கப்படாத தோல் கழிவுநீர், சாயநீர், சர்க்கரை ஆலைகளின் கழிவுநீர், சாக்கடைர், மதுபான கழிவுநீர், குளிர்பான கழிவுநீர் என்று பாலாறு மாசடைந்து, கறுப்பு ஆறாக மாறி சைனைடு, மெர்குரி, நிக்கல், குரோமியம், புளோரைடு, போன்றவையால் நிலமும் ரும் நஞ்சாக மாறிவிட்டது. விஷக் கழிவுகளை வெறியேற்றும் தொழிற்சாலைகள் மீது மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலமாக நடவடிக்கை எடுத்து ஒழுங்குபடுத்திட வேண்டும்.

வட தமிழ்நாட்டு விவசாயப் பெருங்குடி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பாலாற்றின் குறுக்கே தேவைப்படும் இடங்களில் தடுப்பணைகள் கட்டி, பருவ காலங்களில் பெய்திடும் மழைநீர் வீணாக கடலில் கலப்பதை தேக்கி நிலத்தடி நீரை சேமித்து விவசாயத்திற்கும், வளர்ந்து வரும் நகர மயமாதலில் வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை போன்ற மாவட்டங்களின் குடிநீர் தேவைக்கும் பயன்படுத்த வேண்டும். 

எனவே தற்போதைய அவசிய தேவை தடுப்பணைகள் மட்டுமே, இதன் மூலம் நீர் ஆதாரத்தை பெருக்க முடியும், விவசாயம் செழிக்கும், நீர் தேங்கினால் மணல் பரப்பு சேமிப்பாகும். இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago