முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக ஜூனியர் கைப்பந்து போட்டி - ரஷ்யா சாம்பியன்

சனிக்கிழமை, 13 ஆகஸ்ட் 2011      விளையாட்டு
Image Unavailable

 

ரியோடி ஜெனீரோ, ஆக. 13 - பிரேசில் நாட்டில் நடைபெற்ற உலக ஜூனியர் கைப்பந்து போட்டியி ன் இறுதிச் சுற்றில் ரஷ்ய அணி அர்ஜென்டினாவை தோற்கடித்து சாம் பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. இது பற்றிய விபரம் வருமாறு - 18 - வது உலக ஜூனியர் கைப்பந்துப் போட்டி பிரேசில் நாட்டில் கடந்த 2 வாரகாலமாக நடைபெற்றது. இதில் முன்னணி நாடுகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றன. முன்னதாக நடந்த அரை இறுதிச் சுற்றில் அர்ஜென்டினா மற்றும் பிரே சில் அணிகள் வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தன. இதன் இறுதிச் சுற்று ஆட்டம் கடந்த 10 -ம்தேதி நடந்தது. 

இந்த இறுதிச் சுற்றில் பட்டத்தைக் கைப்பற்ற பிரேசில் மற்றும் அர்ஜெ ன்டினா அணிகள் பலப்பரிட்சை நடத்தின. தரவரிசையில் முதலிடத்தி ல் இருக்கும் அர்ஜென்டினாவும், 2 -வது இடத்தில் இருக்கும் ரஷ்யாவு ம் மோதியாதால் இறுதிப் போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருந்தது. 

பரபரப்பான இந்த இறுதிச் சுற்றின் முடிவில் ரஷ்ய அணி 25 -19, 23 - 25,  21 - 25, 25 - 18, 15 - 12 என்ற கணக்கில் அர்ஜென்டினாவை கடுமை யாக போராடி வென்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. இந்த ஆட்டம் 2 மணி நேரம் 5 நிமிடம் நடந்தது. 

ரஷ்யா 3 -வது முறையாக உலக ஜூனியர் கைப்பந்து போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இதற்கு முன்பு 1995, 1999, 2003 -ம் ஆண்டுகளில் பட்டம் வென்று இருந்தது. ஒருங்கிணைந்த சோவிய த் யூனியனாக இருந்த போது, 1977, 1981, 1985, 1989 ஆண்டிலும் வெற் றி பெற்று இருந்தது. 

செர்பியா அணி 25 - 15, 25 - 20, 23 - 25, 25 - 13 என்ற கணக்கில் அமெரி க்காவை வீழ்த்தி 3 -வது இடத்தை பிடித்தது. அமெரிக்கா அணிக்கு 4 - வது இடம் கிடைத்தது. இது அந்த நாட்டு ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது. 

இந்திய அணி 7 - வது இடத்துக்கான ஆட்டத்தில் ஸ்பெயினுடன் மோ தியது. இதில் இந்தியா 25 - 21, 25 - 17, 21 - 25, 12 - 25, 17 - 19 என்ற செ ட் கணக்கில் தோற்றது. முதல் 2 செட்டை வென்று அடுத்த 3 செட்டில் தோற்றது. இதனால் இந்தியாவுக்கு 8 -வது இடம் கிடைத்தது. 

இந்தப் போட்டியில் இந்திய அணி 2 -வது சுற்றில் நடப்பு சாம்பியன் பிரேசிலை வீழ்த்தி அதிர்ச்சி அடைய வைத்தது. பிரேசில் அணி 3 - 2 என்ற கணக்கில் ஈரானை வீழ்த்தி 5 -வது இடத்தைப் பிடித்தது. ஈரானு க்கு 6 -வது இடம் கிடைத்தது. 

பெல்ஜியம் அணி 3 - 2 என்ற கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி 4 -வது இடத்தையும், கனடா அணி 3 - 0 என்ற கணக்கில் ஜப்பானை தோற்க டித்து 11 - வது இடத்தையும் பிடித்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்