முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அணி பின்னடைவுக்கு அனைத்து வீரர்களும் பொறுப்பு

சனிக்கிழமை, 13 ஆகஸ்ட் 2011      விளையாட்டு
Image Unavailable

 

லண்டன், ஆக. 13 - இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் பின்ன டைவிற்கு அனைத்து வீரர்களும் பொறுப்பு என்று துவக்க வீரரான கெளதம் காம்பீர் தெரிவித்து இருக்கிறார். இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 -வது டெஸ்ட் போட்டி பர்மிங்ஹாம் நகரில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத் தில் கடந்த 3 நாட்களாக னடைபெற்று வருகிறது. இடையே நிருபர்க ளைச் சந்தித்த காம்பீர் கூறியதாவது - 

இந்த சுற்றுப் பயணத்தில் நாங்கள் எங்களது வழக்கமான ஆட்டத்தை ஆடவில்லை என்பதை ஒப்புக் கொள்கிறேன். இந்த பின்னடைவுக்கு யாரையும் தனிப்பட்ட முறையில் குற்றம் சொல்ல முடியாது. 

அனைத்து வீரர்களுமே இதற்கு பொறுப்பேற்கிறோம். அதே நேரத்தி ல் ஒரு தொடரை மட்டும் வைத்து இந்திய அணியை எடை போட்டு விட முடியாது. கடந்த இரண்டரை ஆண்டு காலத்தில் இந்திய அணி மிக சிறப்பாக ஆடி வந்துள்ளது. 

அதே திறமை இப்போதும் எங்களிடம் இருக்கிறது. எனவே வரும் கா லத்தில் சிறப்பாக ஆடி திறமையை நிரூபிக்க முடியும். இவ்வாறு அவ ர் கூறினார். 

கேப்டன் தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கி லாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கேப்டன் ஸ்ட்ராஸ் தலை மையிலான அந்த அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. 

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. இதில் ஏற்கனவே 2 போட்டிகள் முடிவடைந்து விட்டது நினைவு கூறத்தக்கது. 

முன்னதாக முடிந்த 2 டெஸ்டிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று 2 - 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. லார்ட்சில் நடந்த முத ல் டெஸ்டில் அந்த அணி 196 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

பின்பு நாட்டிங்ஹாமில் நடந்த 2 -வது டெஸ்டில் 319 ரன் வித்தியாசத் தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணியின் இந்த தொடர் வெற்றி யினால் இந்திய அணிக்கு கண்டனக் கனைகள் குவிந்த வண்ணம் இருக் கிறது. 

தற்போது நடந்து வரும் 3 -வது டெஸ்டிலும் இந்திய அணி இக்கட்டா    ன நிலையில் உள்ளது. இங்கிலாந்து அணி பிரமாண்டமான ஸ்கோரை நெருங்கி வருகிறது. 

ஐ.சி.சி.யின் டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி நம்பர் - 1 அணியாக உள்ளது. இங்கிலாந்து அணி இந்தத் தொடரை கைப்பற்றினால் இந்தி ய அணி நம்பர் - 1 இடத்தை இழக்கும். அதே நேரத்தில் இங்கிலாந்து அணி தரவரிசையில் முன்னேறும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்