முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீண்டும் இந்திய அணியில் இடம் பெறுவேன்: ஹர்பஜன்

சனிக்கிழமை, 13 ஆகஸ்ட் 2011      விளையாட்டு
Image Unavailable

 

பெங்களூர், ஆக. 13 - விரைவில் காயத்திலிருந்து குணமடைந்து மீண்டும் அணியில் இடம் பெறுவேன், எனது பயணம் தொடரும் என்று இந்திய அணியின் முன்ன ணி சுழற் பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் தெரிவித்தார். இங்கிலாந்து சுற்றுப் பயணத்திற்கான இந்திய அணியில் ஹர்பஜன் சிங் கும் இடம் பெற்றிருந்தார். இந்நிலையில், வயிற்றில் ஏற்பட்ட தசைப் பிடிப்பு காரணமாக தற்போது அவர் டெஸ்ட் , 20 ஓவர் போட்டி மற் றும் ஒரு நாள் தொடரில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். 

தசைப் பிடிப்புக்காக தற்போது அவர் சிகிட்சை மேற்கொண்டு வருகி றார். காயம் இருந்த நிலையில், அதனை மறைத்து அணியில் இடம் பிடித்துள்ளார் என்று ஹர்பஜன் சிங் மீது முன்னாள் வீரர்கள் பலரும் குற்றம் சாட்டியுள்ளனர். 

நடந்து முடிந்த 2 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா படுதோல்வி அடைந்துள்ளது. இதற்கு காயத்தால் அவதிப்படும் ஜாஹிர்கான், ஹர்பஜன் சிங் ஆகிய வீரர்களே காரணம் என்று பரவலாக குற்றம் சாட்டப்படுகி றது. 

இந்நிலையில், நாடு திரும்பியுள்ள ஹர்பஜன் சிங் தற்போது பெங்களூ ரில் தங்கியிருந்து சிகிட்சை மேற்கொண்டு வருகிறார். அங்கு அவர் நிருபர்களைச் சந்தித்த போது தெரிவித்ததாவது - 

இது எனக்கு இக்கட்டான நேரம் என்பதை ஒப்புக் கொள்கிறேன். எனி னும் எனது காயம் வேகமாக குணமடைந்து வருகிறது. 2 வாரங்கள் முதல் 3 வாரங்கள் வரை ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்க ள் அறிவுரை வழங்கியுள்ளார்கள். 

இங்கிலாந்து தொடருக்கு முன்பு மேற்கு இந்தியத் தீவு சுற்றுப் பயணத் தில் நான் சிறப்பாகவே செயல்பட்டேன். டெஸ்ட் தொடரில் 11 விக் கெட்டுகளை கைப்பற்றினேன். டெஸ்ட் தொடரை கைப்பற்றவும் முக் கிய காரணமாக இருந்தேன். 

அரை சதம் ஒன்றையும் அடித்தேன். எனவே எனது திறன் மோசமாக இருக்கிறது என்று யாரும் குற்றம் சாட்ட முடியாது. கடந்த 2004 -ம் ஆண்டு எனது விரலில் காயம் ஏற்பட்டது. இதற்காக, அறுவை சிகிட்சை மேற்கொண்டு 7 மாதங்கள் வரை ஓய்வு எடுத்தேன். 

ஆனால் அதன் பிறகு, மீண்டும் விளையாட வந்து அதிகம் விக்கெட்டு களை கைப்பற்றினேன். தற்போது, 2 வாரம் தான் ஓய்வு எடுக்க உள்ளேன். எனவே, இது பெரிய விஷயம் அல்ல. எப்போதும், சிறப்பான பங்களிப்பை அளிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம் ஆகும். 

காயத்தை வேண்டுமென்றே மறைத்து அணியில் நான் இடம் பிடித்த  தாக சொல்வதும் தவறு. கிரிக்கெட் மட்டுமல்ல. விளையாட்டு வீரர்க ளுக்கு காயம் ஏற்படுவதும், ஓய்வு எடுப்பதும் சகஜமான ஒன்று தான். 

முன்னாள் சுழற் பந்து ஜாம்பவான் அனில் கும்ப்ளேவிடம் ஆலோச னை பெற்றீர்களா? என்று பலரும் கேட்கிறார்கள். கும்ப்ளே எனக்கு நன்கு அறிமுகமானவர். எப்போது வேண்டுமானாலும் நான் தொ லைபேசியில் பேசுவேன். அந்தளவுக்கு உரிமை உள்ளது. 

ஆனால், தற்போது அந்த அளவுக்கு மோசமான நிலைமையில் இருப் பதாக நான் கருதவில்லை. இந்த சூழ்நிலையை என்னால் சமாளித்துக் கொள்ள முடியும். விரைவில், காயத்தில் இருந்து மீண்டு வருவேன். அணியிலும் பங்கேற்று எனது பயணத்தை தொடருவேன். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்