முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆரக்ஷான் படத்தின் தடையை நீக்கக்கோரி மனு தாக்கல்

சனிக்கிழமை, 13 ஆகஸ்ட் 2011      சினிமா
Image Unavailable

 

புதுடெல்லி, ஆக. 13 - ஆரக் ஷான் படத்தின் மீதான தடையை நீக்கக்கோரி தயாரிப்பாளர் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மனு ஒன்றை தாக்கல் செய்தார். பிரபல இந்தி திரையுலக சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் நடித்து விரைவில் வெளிவர இருக்கும் ஆரக்ஷான் இந்தி திரைப்படத்தில் தலித்துகளைப் பற்றி அவதூறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இந்த சினிமாக படத்திற்கு சில மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதையடுத்து உத்தரபிரதேசம், பஞ்சாப், ஆந்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்த படத்தை திரையிடக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை நீக்கக்கோரி தயாரிப்பாளர் பிரகாஷ் ஜா நேற்று சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அரசியல் அமைப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ளபடிதான் இந்த படத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த படத்திற்கு தடை விதிக்கப்பட்டிருப்பது அரசியல் சட்டத்திற்கு எதிராக உள்ளது என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாக பிரகாஷ் ஜாவின் வழக்கறிஞர் அமீத் நாயக் கூறியுள்ளார். 

1952 ஆம் ஆண்டின் சினிமா சட்டத்தின்கீழ் அமைக்கப்பட்டுள்ள மத்திய திரைப்பட தணிக்கைக் குழுவே இந்த திரைப்படத்திற்கு சான்றிதழை வழங்கியுள்ளது. இந்த படத்தை பொது இடங்களில் திரையிடவும் தணிக்கைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அப்படி இருக்கும்போது இந்த திரைப்படத்தை திரையிடுவதற்கு சில மாநில அரசுகள் எப்படி தடை விதிக்க முடியும்? என்று அந்த ரிட் மனுவில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. மத்திய தணிக்கைக் குழுவில் எஸ்.சி.,எஸ்.டி. பிரிவினர் உள்பட அனைத்து பிரிவினரும் அங்கம் வகிக்கிறார்கள். அப்படி இருக்கும்போது இது ஒரு குறிப்பிட்ட பிரிவினரை இந்த படம் புன்படுத்துவதாக கூறப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. 

இந்திய அரசியல் சட்டம் 19 (1)(அ)பிரிவின்கீழ் இந்த மனுதாரரின் அடிப்படை உரிமையை மீறுவதாக இந்த தடை உள்ளது என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்