உலகக்கோப்பை-நியூசிலாந்து 10 விக்கெட்டில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தியது

சனிக்கிழமை, 5 மார்ச் 2011      தமிழகம்
McCullum

 

அகமதாபாத், மார்ச். - 5 - உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அகமதாபாத் நகரில் நடை பெற்ற லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தி ல் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி முன்னிலை பெற்றுள்ளது.  இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி தரப்பில், குப்டில் மற்றும் மெ க்குல்லம் இருவரும் அபாரமாக பேட்டிங் செய்து அரை சதம் அடித்து அணிக்கு வெற்றி தேடித் தந்தனர். முன்னதாக பெளலிங்கின் போது, செளதீ, மில்ஸ் மற்றும் கேப்டன் வெட்டோரி ஆகிய மூவரும் நன்கு பந்து வீசி ஜிம்பாப்வே அணியின் ரன் குவிப்பை கட்டுப்படுத்தினர். 

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் குஜராத் மாநிலத்தின் தலை நகரான அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் அரங்கத்தில் 18 - வ து ஆட்டம் நடந்தது. இதில் குரூப் ஏ பிரிவு சார்பில் நியூசிலாந்து மற்று ம் ஜிம்பாப்வே அணிகள் மோதின. 

இந்த ஆட்டத்தில் முன்னதாக பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி நியூ சிலாந்து அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. இறுதியில் அந்த அணி 46.2 ஓவரில் அனைது விக்கெட்டையும் இழந்து 162 ரன்னில் சுருண்டது. இதில் 2 வீரர்கள் மட்டும் கால் சதம் அடித்தனர். 

துவக்க வீரரான டெய்லர் அதிகபட்சமாக 57 பந்தில் 44 ரன்னை எடுத் 

தார். இதில் 4 பவுண்டரி அடக்கம். அடுத்தபடியாக பின் வரிசை வீர

ரான உத்செயா 65 பந்தில் 36 ரன்னை எடுத்தார். கிரமர் 43 பந்தில் 22 ரன்னையும், லேம்ப் 34 பந்தில் 18 ரன்னையும் எடுத்தனர். 

நியூசிலாந்து அணி சார்பில், செளதீ 29 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். மில்ஸ் 29 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். கேப் 

டன் வெட்டோரி 25 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். ஸ்டை

ரிஸ் 13 ரன்னைக் கொடுத்து 1 விக்கெட் எடுத்தார். 

நியூசிலாந்து அணி 163 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற எளிய இலக்கை ஜிம்பாப்வே அணி வைத்தது. அடுத்து களம் இறங்கிய அந்த அணி 33.3 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 166 ரன்னை எடுத்தது. 

இதனால் நியூசிலாந்து அணி இந்த லீக் ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தி யாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் நியூசி. அணிக்கு 2 புள்ளிகள் கிடைத்தது. 

நியூசிலாந்து அணி தரப்பில், துவக்க வீரர் குப்டில் 108 பந்தில் 86 ரன் னை எடுத்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதில் 7 பவு ண்டரி மற்றும் 2 சிக்சர் அடக்கம். 

மற்றொரு துவக்க வீரரான பிரண்டன் மெக்குல்லம் 95 பந்தில் 76 ரன் னை எடுத்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதில் 6 பவு

ண்டரி மற்றும் 2 சிக்சர் அடக்கம். இருவரும் இணைந்து முதல் விக்கெ

ட்டிற்கு 166 ரன் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்: