மே.இ.தீவு அபார வெற்றி வங்கதேசம் 58 ரன்னில் சுருண்டது

சனிக்கிழமை, 5 மார்ச் 2011      தமிழகம்
Martin Guptill1) 0

 

மிர்பூர், மார்ச். - 5  -  உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் மிர்பூரில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி முன்னிலை பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி தரப்பில், கீமர் ரோச், சுலைமான் பென் மற்றும் டேரன் சம்மி ஆகிய மூவரும் நன்கு பந்து வீசி அணிக்கு வெற்றி தேடித் தந்தனர்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் மிர்பூரில் உள்ள ஷெரே பங் க்ளா தேசிய அரங்கத்தில் 19 -வது போட்டி நடந்தது. இதில் குரூப் பி யைச் சேர்ந்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி மற்றும் வங்கதேச அணிகள் மோதின. 

முன்னதாக இந்த ஆட்டத்தில் பேட்டிங் செய்த வங்கதேச அணி மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் வேகப் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. இறுதியில் அந்த அணி 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 58 ரன்னில் சுருண்டது. 

வங்கதேச அணி தரப்பில், ஜுனைட் சித்திக் 27 பந்தில் 25 ரன்னை எடு த்தார். ஆல்ரவுண்டர் மொகமது அஸ்ரப்புல் 21 பந்தில் 11 ரன்னை எடு த்தார். கேப்டன் ஹசன் 8 ரன்னிலும், தமீம் இக்பால் பூஜ்யத்திலும், இம்ருல் கெய்ஸ் 5 ரன்னிலும், முஸ்பிகர் ரகீம் பூஜ்யத்திலும், ரகிபுல் ஹசன் 4 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். 

மேற்கு இந்தியத் தீவுகள் அணி சார்பில், கீமர் ரோச் 19 ரன்னைக் கொ டுத்து 3 விக்கெட் எடுத்தார். சுலைமான் பென் 18 ரன்னைக் கொடுத்து 4 விக்கெட் எடுத்தார். தவிர, டேரன் சம்மி 21 ரன்னைக்கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். 

மே.இ.தீவுகள் அணி 59 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற எளிய இலக்கை வங்கதேச அணி வைத்தது. அடுத்து களம் இறங்கிய அந்த அணி 12.2 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 59 ரன்னை எடுத்தது. 

இதனால் மே.இ.தீவுகள் அணி இந்த லீக் ஆட்டத்தில் 9 விக்கெட் வித் தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணிக்கு 2 வெற்றி புள்ளிகள் கிடைத்தது. இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக கீமர் ரோச் தேர்வு செய்யப்பட்டார். 

மே. இ.தீவுகள் அணி தரப்பில், கிறிஸ் கெய்ல் 36 பந்தில் 37 ரன்னை எடுத்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். அவருக்கு பக்கபலமாக ஆடிய பிராவோ 9 ரன்னை எடுத்தார். முன்னதாக டி. ஸ்மித் 6 ரன்னில் ஆட்டம் இழந்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்: