முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நந்தா - ஆண்ட்ரியா நடிக்கும் திருப்பங்கள்

ஞாயிற்றுக்கிழமை, 14 ஆகஸ்ட் 2011      சினிமா
Image Unavailable

 

சென்னை,ஆகஸ்ட்,14 - சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய `கண்டேன்' படத்தை அடுத்து, ஸ்ரீசிவசெல்வநாயகி அம்மன் மூவீஸ் பட நிறுவனம் சார்பில் டி.சி.எஸ். மிகப் பிரம்மாண்டமாகத் தயாரிக்கும் புதிய படத்துக்கு திருப்பங்கள் என பெயரிடப்பட்டிருக்கிறது. இப்படத்தில் நந்தா கதாநாயகனாக நடிக்கிறார். பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்களில் நடித்த ஆண்ட்ரியா கதாநாயகியாக நடிக்கிறார். மற்றொரு கதாநாயகியாக சுர்வின் என்ற மும்பை நடிகை நடிக்கிறார்.

மற்றும் சாம்ஸ், குழந்தை நட்சத்திரம் தாரணி, பாலிவுட் நடிகர் கெளதம் குரூப் ஆகியோர்

நடிக்கிறார்கள். அமிதாப்பச்சன், மோகன்லால் நடித்த காந்தகார் மலையாள படத்தில் வில்லனாக நடித்தவர் கெளதம் குரூப் என்பது குறிப்பிடத்தக்கது.

நா.முத்துகுமார் பாடல்களை எழுத, வித்யாசாகர் இசையமைக்கிறார். நடனம்: சிவசங்கர்

சண்டைப்பயிற்சி: செல்வம்,  படத்தொகுப்பு: ராஜலட்சுமி. படத்தொகுப்பாளராக பெண்கள் இதுவரை பணியாற்றியது இல்லை. இந்தியாவிலேயே முதல் பெண் படத்தொகுப்பாளர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. தயாரிப்பு நிர்வாகம்: சுந்தர், நிர்வாகத் தயாரிப்பாளர்: ஏ.செபாஸ்டியன்

நகைச்சுவை மற்றும் இசைக்கு முக்கியத்துவம் கொண்ட உணர்ச்சிகரமான திகில் படமாக

உருவாகும் திருப்பங்கள் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி தொடர்ந்து

நடைபெற்று வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago