முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுமுகங்கள் நடிக்கும் கொஞ்சம் காபி கொஞ்சம் காதல்

ஞாயிற்றுக்கிழமை, 14 ஆகஸ்ட் 2011      சினிமா
Image Unavailable

 

சென்னை,ஆகஸ்ட்,14 - கொஞ்சம் காபி கொஞ்சம் காதல் ஒரு இளமையான, இனிமையான காதல் கதை. சித்தார்த் என்ற துடிப்பான இளைஞனுக்கும் பிரியங்கா என்ற அழகான பெண்ணுக்கும் ஒரு காபி ஷாப்பில் உண்டாகும் சந்திப்பு காதலாக மலர்வதை சொல்லும் கதை. பெற்றோரின் சம்மதத்திற்கு காத்திருக்காமல்இருவரும் திருமணம் செய்து கொண்டு கொடைக்கானல் செல்கின்றனர். நெருக்கமும் இறுக்கமும் கூடலும் ஊடலுமாக செல்லும் அவர்கள் வாழ்க்கையில் விதி குறுக்கிடுகிறது.  அவர்களுக்கு இடையே உண்டான பிரிவு அவர்களிடையே பயத்தை ஏற்படுத்தியது. தனியே கலங்கி நிற்கிறான் சித்தார்த். அப்பாழுது அவன் சந்திக்கும் இருவரால் அவனது வாழ்க்கையே முற்றிலும் மாறுகிறது. அவன் சந்திக்கும் அந்த இருவர் யார்? அவனது வாழ்க்கையை எவ்வாறு மாற்றுகிறார்கள்? இந்த கேள்விக்கான அழகான விடை தான் கொஞ்சம் காபி கொஞ்சம் காதல். இதில் காதல் உண்டு. மகிழ்ச்சி உண்டு. சிந்திக்க வைக்கும் திருப்பங்கள் உண்டு. இதமான தென்றல் வருடி செல்வதை போல் கதையையும் காதலையும் சொல்லிச் செல்லும் திரைப்படம் கொஞ்சம் காபி கொஞ்சம் காதல். 16 புதுமுகங்களையும் ஒரு அறிமுக இசை அமைப்பாளரையும், ஒரு அறிமுக நடன இயக்குனரையும் பெருமையுடன் அறிமுகப்படுத்துகிறது கொஞ்சம் காபி கொஞ்சம் காதல். காபியின் சுவையை போல உற்சாகமூட்டி மனதில் சந்தோஷத்தை தெளித்து செல்லும் ஒரு செல்ல மழை தான் கொஞ்சம் காபி கொஞ்சம் காதல். உங்களை காதல் மீதும் காபியின் மீதும்,ஏன், வாழக்கையின் மீதும் காதல் கொள்ள  வைக்கும் `கொஞ்சம் காபி கொஞ்சம் காதல்'. 

இப்படத்தில் ஹரி நடராஜ், அதீதி, ரமணன், மது, கிருஷ்ணானந்ந் ஐயப்பன், சுபாஷினி, ஆர்த்தி டான்டன், சத்யா மற்றும் பலர் நடிக்கிறார்கள். பரணி கல்யாண் இசை அமைத்துள்ளார். வெங்கி இயக்கி உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்