முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிரிக்கெட் டெஸ்ட் - தொடரை இழந்தது இந்தியா

ஞாயிற்றுக்கிழமை, 14 ஆகஸ்ட் 2011      விளையாட்டு
Image Unavailable

 

பர்மிங்ஹாம், ஆக. 14 - இந்திய அணிக்கு எதிராக பர்மிங்ஹாமில் நடைபெற்ற 3 -வது டெஸ்டில் இங்கிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 242 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் டெஸ்ட் தொடரை 3 - 0 என்ற கணக்கில் கைப்பற்றி உள்ளது. இந்திய அணியின் முன்னணி வீரர்களால் இங்கிலாந்து அணியின் வே கப் பந்து வீச்சாளர்களை சமாளித்து ரன்னை எடுக்க முடியவில்லை. முதல் 2 டெஸ்ட் போலவே இதிலும் மோசமாக ஆடி தோற்றனர். 

இந்திய அணி தொடர்ச்சியாக 3 டெஸ்டிலும் தோற்றதால் தொடரை இழந்ததுடன் ஐ.சி.சி.யின் டெஸ்ட் தரவரிசைக்கான பட்டியலில் நம்ப ர் - 1 இடத்தையும் இழக்கிறது. இந்தத் தொடரின் துவக்கத்தில் இங்கி லாந்து அணி 3 -வது இடத்தில் இருந்தது. 

இந்த டெஸ்டில் இங்கிலாந்து அணியின் துவக்க வீரரான அலிஸ்டார் குக் அபாரமாக பேட்டிங் செய்து 294 ரன்னைக் குவித்து அணி பிரமா  ண்டமான ஸ்கோரை எடுக்க உதவினார். மார்கன் சதம் அடித்தார். தவிர, கேப்டன் ஸ்ட்ராஸ், பீட்டர்சன் மற்றும் பிரஸ்னன் ஆகியோர் அவருக்கு பக்கபலமாக ஆடினர். 

பெளலிங்கின் போது, முன்னணி வேகப் பந்து வீச்சாளர்களான ஆண்டர்சன், பிராட் மற்றும் பிரஸ்னன் ஆகியோர் வெகு நேர்த்தியாக பந்து வீசி இந்திய வீரர்களை திணற வைத்தனர். ஸ்வான் அவர்களுக்கு பக்க பலமாக பந்து வீசினார். 

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 -வது டெஸ்ட் போட்டி பர்மிங்ஹாம் நகரில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத் தில் கடந்த 10 -ம் தேதி துவங்கி நேற்றுடன் முடிந்தது. 

இந்திய அணி முதல் 2 டெஸ்டில் தோல்வி அடைந்தது. லார்ட்சில் நடந்த டெஸ்டில் 196 ரன் வித்தியாசத்திலும், நாட்டிங்ஹாமில் நடந்த 2 -வ து டெஸ்டில் 319 ரன் வித்தியாசத்திலும்தோற்றது. எனவே இதில் வெ ற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்திய வீரர்கள் வழக்கம் போல இதிலும் மோசமாக ஆடியால் அணி தோற்றது. 

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 62.2 ஓவ ரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 224 ரன்னை எடுத்தது. கேப்ட ன் தோனி 77 ரன்னையும், காம்பீர் 38 ரன்னையும், லக்ஷ்மண் 30 ரன் னையும், குமார் 26 ரன்னையும், எடுத்தனர். 

பின்பு முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 188.1 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 710 ரன்னைக் குவித்தது. அந்த அணி சார்பில் ஒரு வீரர் இரட்டை சதமும், ஒரு வீரர் சதமும், 3 வீரர்கள் அரை சதமும் அடி த்தனர். 

துவக்க வீரராக இறங்கிய குக் 6 ரன் வித்தியாசத்தில் முச்சதத்தை கோ  ட்டை விட்டார். அவர் 545 பந்தில் 294 ரன்னை எடுத்தார். இதில் 33 பவுண்டரி அடக்கம். டெஸ்ட் போட்டியில் இதுவே அவருக்கு அதிகப ட்ச ரன்னாகும். இறுதியில் ஆட்டநாயகன் விருதினையும் பெற்றார். 

அடுத்தபடியாக மார்கன் 199 பந்தில் 104 ரன்னை எடுத்தார். இதில் 11 பவுண்டரி அடக்கம். தவிர கேப்டன் ஸ்ட்ராஸ் 176 பந்தில் 87 ரன்னையு ம், பீட்டர்சன் 78 பந்தில் 63 ரன்னையும், பிரஸ்னன் 75 பந்தில் 53 ரன் னையும் எடுத்தனர். 

பின்பு  2-வது இன்னிங்சை ஆடிய இந்திய அணி 55.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 244 ரன்னை எடுத்தது. இதனால் இங்கிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 242 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை 3 -  0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 

இந்திய அணி சார்பில் கேப்டன் தோனி அதிகபட்சமாக, 79 பந்தில் 74 ரன்னை எடுத்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். டெண்டு ல்கர் 60 பந்தில் 40 ரன்னை எடுத்தார். பிரவீன் குமார் 18 பந்தில் 40 ரன் னை எடுத்தார். 

இந்தப் போட்டியில் கேப்டன் தோனி மட்டும் தாக்குப் பிடித்து 2 இன் னிங்சிலும் ஆடி அரை சதம் அடித்தார். காம்பீர், லக்ஷ்மண், டெண்டுல் கர் மற்றும் டிராவிட் ஆகியோர் எதிர்பார்த்த அளவிற்கு ஆடவில்லை. சேவாக், ரெய்னா இருவரும் ஏமாற்றம் அளித்தனர். 

அதே போல இந்தியாவின் முன்னணி வேகப் பந்து வீச்சாளரான ஜா ஹிர்கான் இடம் பெறாதது இந்தத் தொடரில் எதிரொலித்தது. பிரவீன் குமார், இஷாந்த் சர்மா மற்றும் ஸ்ரீசாந்த் ஆகியோர் மாறி மாறி பந்து வீசிய போதிலும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை ஒன்றும் செய்ய முடியவில்லை. மிஸ்ரா ஓரளவிற்கு சுழற் பந்துகளை வீசினார்.

இது கேப்டன் தோனி தலைமைக்கு கிடைத்த மோசமான தோல்வி யாகும். இதுவரை அவர் டெஸ்ட் தொடரை இழந்தது கிடையாது. முதன் முறையாக டெஸ்ட் தொடரை கோட்டை விட்டு இருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago