முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பஞ்சாப் - அரியானாவில் கனமழைக்கு 5 பேர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 14 ஆகஸ்ட் 2011      இந்தியா
Image Unavailable

 

சண்டிகார், ஆக.14 - பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனத்த மழை பெய்துவருகிறது. இதில் இதுவரை 5 பேர் பலியாகியுள்ளனர். இந்தியாவில் மழைக்காலம் தொடங்கிவிட்டதால் வட இந்தியாவில் உள்ள சில மாநிலங்களில் நல்ல மழை பெய்துவருகிறது. பஞ்சாப் அரியானா மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனத்த மழை பெய்துவருகிறது. லூதியானா, அமிர்தசரஸ் உள்ளிட்ட பஞ்சாபின் பல்வேறு மாவட்டங்களில் மழை தொடர்ந்து பெய்துவருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. வீடுகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. பஞ்சாபில் ஓடும் அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. லூதியானா மாவட்டத்தில் உள்ள ஒரு பழங்கால கோட்டைச் சுவர் இடிந்து விழுந்ததில் அண்ணன், தம்பி ஆகியோர் மண்ணில் புதைந்து பலியானார்கள் என்று கூடுதல் போலீஸ் துணை கமிஷனர் சுசில்குமார் தெரிவித்தார். இதேபோல இதே லூதியானா மாவட்டத்தில் ஒரு வீட்டின் கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஒரு பெண் பலியானார். இந்த பெண்ணின் குடும்பத்தினர் 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். லூதியானாவில் முழங்கால் அளவு தண்ணீரில் நடந்துசென்ற ஒருவர் மின்சாரம் தாக்கி பலியானார். 

லூதியானா-பெரோஸ்பூர் சாலையில் இரும்பு பாரம் ஏற்றிச்சென்ற ஒரு லாரி வெள்ளத்தில் சிக்கிக்கொண்டதில் அந்த லாரியை ஓட்டிச்சென்ற டிரைவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். பஞ்சாப் மற்றும் அரியானாவில் பாயும் சட்லெஜ், பியாஸ் ரவி, யமுனா, சோம் உள்ளிட்ட அனைத்து நதிகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. லூதியானாவில் மட்டும் 107.4 செ.மீ.  மழை பெய்தது.  இதேபோல அரியானாவிலும் பல மாவட்டங்களில் வெள்ளம் தேங்கியுள்ளது. மழை தொடர்ந்து பெய்து வருகிறது. மழை வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்