முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அழகர்கோவிலில் ஆடித் தேரோட்டம்: பக்தர்கள் குவிந்தனர்

ஞாயிற்றுக்கிழமை, 14 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

மதுரை,ஆக.14 - மதுரை அருகே உள்ள அழகர்கோவில் ஆடித்திருவிழா தோரோட்டம் நேற்று காலை கோலாகலமாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரைவடம் பிடித்து இழுத்தனர். மதுரையை அடுத்த அழகர்கோவில் கள்ளழகர் கோவிலில் சிறப்பு வாய்ந்த ஆடி பெருந்திருவிழா, கடந்த 5 -ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் உச்சக்கட்ட நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை 8.40 மணிக்கு நடந்தது. முன்னதாக அலங்கரிக்கப்பட்ட தேரில் கள்ளழகர் ஸ்ரீதேவி -பூதேவியருடன் எழுந்தருளிதனார். பின்னர் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இந்நிகழ்ச்சியில் இந்து அறநிலைத்துறை அமைச்சர் சண்முகநாதன் மற்றும் கோவில் அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர். தேர் எளிதாக செல்வதற்கு வசதியாக இந்த ஆண்டு முதன்முறையாக இரும்பு சக்கரங்களும் பொருத்தப்பட்டு இருந்தது. பக்தர்கள் வெள்ளத்தில் தேர் அசைந்தாடி வந்தது பார்க்க கண் கொள்ளாகாட்சியாக இருந்தது.

தேரோட்ட நிகழ்ச்சியில் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, விருதுநகர், திருச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் வசதிக்காக மதுரை, மேலூர், திண்டுக்கல் மாவட்டம் நத்தம், வாடிப்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றது. நேற்று இரவு பூப்பல்லக்கில் கள்ளழகர் என்ற சுந்தரராஜபெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வரும் 15-ம் தேதி உற்சவ காந்தியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்