சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு: பி.ஜே.தாமஸ் மறுஆய்வு மனுதாக்கல் செய்யதிட்டம்

சனிக்கிழமை, 5 மார்ச் 2011      இந்தியா
BJP thomass

 

புது டெல்லி,மார்ச்.-5 - மத்திய தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையர் பதவியில் பி.ஜே. தாமஸ் நியமிக்கப்பட்டது செல்லாது என சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பை அடுத்து மறு ஆய்வு மனு தாக்கல் செய்வது குறித்து ஆலோசித்து வருவதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.  

ஊழல் கண்காணிப்பு ஆணையராக பி.ஜே.தாமஸ் நியமிக்கப்பட்டது செல்லாது என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியதை அடுத்து அவர் ராஜினாமா செய்து விட்டதாகவும் கூறப்படுகிறது. 

இந்நிலையில் அதை அவரது வழக்கறிஞர் மறுத்துள்ளார். தீர்ப்பை முழுமையாக படித்த பிறகு ராஜினாமா செய்வதா அல்லது தீர்ப்பை எதிர்த்து மறு ஆய்வு மனு தாக்கல் செய்வதா என்பது குறித்து தாமஸ் முடிவெடுப்பார் என்று அவர் தெரிவித்தார். மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையரை ஜனாதிபதிதான் பதவியில் இருந்து நீக்க முடியும். அல்லது அவரே தாமாக முன்வந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்: