முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊழல் பிரச்சனைக்கு உண்ணாவிரதம் தீர்வாகாது சுதந்திர தின விழாவில் பிரதமர் மன்மோகன் பேச்சு

திங்கட்கிழமை, 15 ஆகஸ்ட் 2011      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி, ஆக.-16 - ஊழலை ஒழிக்க வலுவான மசோதா கொண்டுவரப்படும் நிலையில் உண்ணாவிரதம் தேவையற்றது என்று பிரதமர் சுதந்திர தினவிழா மேடையில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது, நமது நாட்டில் சிலர் அரசுக்கு இடையூறு ஏற்படுத்த நினைக்கிறார்கள். இதனால் நாட்டின் வளர்ச்சி தடைபடும். நாட்டின் நலனுக்காக நாம் ஒன்று பட்டு நிற்கவேண்டும். மக்கள் நலனுக்காக விரைவில் உணவு பாதுகாப்பு சட்டம் கொண்டுவரவுள்ளது. ஊழல் வழக்குகளில் மத்திய அரசு மிகவும் கடுமையான நடவடிக்கை எடுத்துவருகிறது. ஊழல் குறித்து விரிவாக விவாதிக்கப்படவேண்டும். ஆனால் அது நாட்டின் வளர்ச்சியை பாதிக்கப்படாத வகையில் இருக்கவேண்டும். ஊழலை தடுக்க வலுவான லோக்பால் சட்டம் கொண்டுவர விரும்புகிறோம். லோக்பால் சட்ட விதிகளை ஏற்காதவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதம் நடத்துவதை கைவிடவேண்டும். ஊழலை ஒழிக்க பல வழிகளில் நடவடிக்கை தேவை. ஒரே ஒரு நடவடிக்கையால் அது முடியாது. எந்த அரசிடமும் அத்தகைய மேஜிக் இல்லை. உண்ணாவிரதப்போராட்டங்களால் இப்பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியாது. இதற்காக பாராளுமன்றத்தில் விரைவில் லோக்பால் சட்டம் கொண்டுவரப்படும். கடந்த சில மாதங்களில் பல ஊழல்கள் வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளன. சில வழக்குகளில் மத்திய அரசு பணியாளர்கள் மற்றும் மாநில அரசு பணியாளர்கள் மீதும் குற்றச்சாட்டுக்கள் உள்ளன. அது குறித்து நாங்கள் கடுமையாக நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்த ஊழல் வழக்குகளின்  விசாரணைகள் கோர்ட்டுகளில் நிலுவையில் இருப்பதால் அது குறித்து நான் விரிவாக பேசமுடியாது. ஊழல் பல வடிவங்களில் உள்ளது. உதாரணமாக அரசு பணி திட்ட ஒப்பந்தங்கள் தவறான மனிதர்களுக்கு தவறான முறைகளில் வழங்கப்பட்டு விடுகிறது. இத்தகைய நடவடிக்கைகளை தொடர அரசு ஒரு போதும் அனுமதிக்காது.

சர்வதேச அளவில் எண்ணை விலை உயர்வு காரணமாக நம்நாட்டில் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்து வருகிறது. பணவீக்கம் கடந்த சில மாதங்களாக அதிகமாக உள்ளது. இதநால் சாதாரண மக்களின் வாங்கும் சக்தி பாதிப்படைந்துள்ளது. இந்த நிலையை நாங்கள் உண்ணிப்பாக கண்காணித்துக்கெண்டிருக்கிறோம். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த புதிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதை உங்களுக்கு உறுதி அளிக்கிறேஅன. வரும் மாதங்களில் இந்த பிரச்சனையே அரசின் மிக முக்கிய கடமையாக இருக்கும்.

நமது நாட்டில் அத்தியாவசிய பொருட்களை உற்பத்தி செய்வதன் மூலம் விலைவாசி உயர்வை சமாளிக்கமுடியும். சமீபகாலமாக உணவு தானிய உற்பத்தி அதிகரித்துள்ளது. இந்த சாதனைக்காக நான விவசாயிகளை பாராட்டுகிறேன். பருப்பு வகைகள், கோதுமை, மற்றும் எண்ணை வித்துக்களின் உற்பத்தி சாதனை படைக்கும் வகையில் உள்ளது. எனவே விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த விரைவில் உணவு பாதுகாப்பு சட்டம் கொண்டுவரப்படும். மேலும் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க 12 வது ஐந்தாண்டு திட்டத்தில் முயற்சிகள் மேற்கொள்ளப்படும். நாட்டில் கல்வியின்மையும், வறுமையும் நாட்டின் சவாலாக இருக்கிறது. ஆரம்ப கல்வி என்பது மக்கலின் அடிப்படை உரிமையாகும். 

பருவநிலை மாற்றம் நமது வளர்ச்சிப்பணிகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. இதை எதிர்கொள்ள 8 அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு வரும் மாதங்களில் ஆய்வுப்பணிகள் துவங்க உள்ளது. 

எனது தலைமையிலான மத்திய அரசு கடந்த 7 ஆண்டுகளில் நிறைய சதனைகள் செய்துள்ளது. இந்த சாதனை தொடரும் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago