முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மன்மோகன் சிங் தேசியக்கொடியை ஏற்றினார்

திங்கட்கிழமை, 15 ஆகஸ்ட் 2011      அரசியல்
Image Unavailable

புதுடெல்லி, ஆக.- 16 - இந்தியாவின் 65 வது சுதந்திரத்தினம் நாடுமுழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தலைநகர் டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்  டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். டெல்லியில் நேற்று முன்தினம் முதல் பலத்தமழை பெய்து வருகிறது. நேற்று அதிகாலை 5.30 மணிக்கு டெல்லி நகரமே மேகம் சூழந்து பலத்த மழை பெய்தது. மழையைப்பயன்படுத்தி மர்ம மனிதர்கள் ஊடுருவிவிடக்கூடாது என்பதற்காக சுதந்திர தினவிழா நடந்த செங்கோட்டை பகுதியில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மழை தொடர்ந்து பெய்துவந்ததால் விழாவில் பங்கேற்க பொதுமக்கள் வருவார்களா என்ற சந்தேகம் அதிகாரிகளுக்கு ஏற்பட்டது. அதனையும் மீறி பொதுமக்கள் திரண்டு தங்களது நாட்டுப்பற்றை வெளிப்படுத்தினார்கள்.

டெல்லியில் உள்ள 35 பள்ளிகளைச்சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள்  மழைக்கோட் அணிந்து விழா நடக்கும் பகுதிக்கு வந்திருந்தனர். பிரதமர் மருவதற்கு முன்பு கொட்டும் மழையில் விழா துவங்கியது. முதலில் மெட்ராஸ் ரெஜிமெண்ட் ராணுவ வீரர்கள் அணிவகுத்து வந்த போது மாணவ,மாணவிகள் கரவொலி எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

காலை 7 மணிக்கு பிரதமர் மன்மோகன் சிங் டெல்லி செங்கோட்டை வந்தார். பாதுகாப்பு மந்திரி ஏ.கே.அந்தோணி மற்றும் முப்படை தளபதிகள் பிரதமரை வரவேற்றனர். புன்பு பாதுகாப்புத்துறை செயலாலர் டெல்லி மண்டல ராணுவ கமாண்டர் மன்வேந்திர சிங் பிரதமரை அறிமுகம் செய்து விட்டு கொடி மேடைக்கு அழைத்துச்சென்றார். மழை தூறிக்கொண்டிருக்கும் போது மன்மோகன்சிங் தேசியக்கொடியை ஏற்றினார். அப்போது 21 குண்டுகள் முழங்க புறாக்கள் பறக்கவிடப்பட்டு மூவர்ண பலூன்களும் ஏராளமாக பறக்கவிடப்பட்டன. இந்த காட்சிகளை பொதுமக்களும், மாணவ,மாணவிகளும் ரசித்தனர். இதனையடுத்து 7.40 மணி முதல் 8.20 வரை சுமார் 40 நிமிடங்கள் பிரதமர் நாட்டுமக்கலுக்கு உரையாற்றினார். அப்போது மழை பெய்தது. விழாவிற்கு வந்திருந்த மக்கல் குடைபிடித்த படி நின்று பிரதமர் பேச்சை கேட்டனர். 90 நிமிட சுதந்திர தினவிழா முழுவதும் மழை பெய்துகொண்டிருந்தது என்றாலும் மக்கள் கலைந்து செல்லவில்லைவிழா முடிந்த பிறகும் மழை தொடர்ந்து பெய்து கொண்டிருந்தது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்