முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை கோட்டையில் கொடியேற்றி முதல்வர் ஜெயலலிதா பேச்சு

செவ்வாய்க்கிழமை, 16 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.- 16 - 64 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை கிடைத்தது.பின்னர் ஜனநாயகநாட்டில்  கடந்த 5 ஆண்டுகள் கொடுங்கோல் குடும்ப ஆட்சியிலிருந்து மீண்டும் ஒரு சுதந்தரம் கிடைத்திருக்கிறது  என்று முதல்வர் ஜெயலலிதா கோட்டையில் தேசியக் கொடியேற்றி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- வரலாற்று சிறப்புமிக்க இந்த புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்திலிருந்து பாரதத் தாயின் மணிக்கொடியை ஏற்றி வைத்ததில் நான் பெருமகிழ்ச்சியும், பேருவகையும் அடைகிறேன். ஆங்கிலேயரிடம் இருந்து நாம் விடுதலைப் பெற்று 64 ஆண்டுகள் முடிந்து விட்டன.  65-வது சுதந்திரத் திருநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த இனிய வேளையில், வங்கக் கடலோரம் வீசும் மெல்லிய nullங்காற்றில் பட்டொளி வீசிப் பறக்கும் இந்த மணிக்கொடி, ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர் வாராது போல வந்த மாமணியாம் இந்த சுதந்திரம் பற்றிய பல்வேறு உணர்வுகளை இத்தருணத்தில் நம்முள்ளே கிளர்ந்தெழச் செய்கிறது.  இந்தியத் திருநாட்டின் சுதந்திரத்திற்காக தங்கள் இன்னுயிரைத் துச்சமென மதித்து, உயிர் தியாகம் செய்த தியாகச் செம்மல்கள் நிறைந்திட்ட மாநிலம் நம் தமிழகம்.  வன்முறைகளுக்கு இடம் கொடாமல், அஹிம்சை மூலமே அடிமை விலங்கைத் தகர்த்தெறிந்த தியாகச் செம்மல்கள் வலம் வந்த இடம் என்ற பெருமையும் பெற்றது நம் தமிழகம். நாட்டின் விடுதலை ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு, தங்களின் சொந்த நலன்களைக் கிஞ்சித்தும் சிந்திக்காமல் நாட்டு விடுதலைக்காகவே தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்த அந்தத் தியாகச் செம்மல்களை நினைவு கூறும் திருநாள் இது.  அனைத்து தரப்பு மக்களும் சாதி, மத, இன வேறுபாடுகளைக் களைந்து, வறுமையில் வாடுவோர் வளம் பெற்று, அனைத்துத் தரப்பு மக்களும் அச்சமின்றி வாழ்வது தான் உண்மையான சுதந்திரம். அந்த வகையில், இந்த சுதந்திரத் திருநாள், தமிழக மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கும் தன்னிகரில்லாத் திருநாள்.  தமிழக மக்களின் முகங்களில், ஊற்றெடுக்கும் மகிழ்ச்சியை காண்கின்ற திருநாள்.  64 ஆண்டுகளுக்கு முன்னர் ஆங்கிலேயரிடமிருந்து நாம் பெற்ற சுதந்திரத்தை இன்று கொண்டாடி மகிழும் அதே வேளையில், தங்களைக் கடந்த ஐந்து ஆண்டுகளாக அடிமைப்படுத்தி இருந்த விலங்கு தற்போது தகர்த்தெறியப்பட்டுள்ளதைத் தமிழக மக்கள் உவகையுடன் கொண்டாடி வருகிறார்கள்.  கடந்த ஐந்து ஆண்டுகளில் எந்த ஒரு துறையிலும் மக்களுக்குச் சுதந்திரம் இல்லை. தமிழக மக்களின் அன்றாட வாழ்க்கையே அச்ச உணர்வில் தான் கழிந்தது.   

எனவே தான், ஐந்து ஆண்டு கால கொடுங்கோல் குடும்ப ஆட்சி ஒழிந்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மக்களாட்சி மலர்ந்தவுடன், மீண்டும் ஒரு சுதந்திரம் கிடைத்த உணர்வு தமிழக மக்களிடையே எழுந்துள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளாக தமிழக மக்கள் சந்தித்த மிக முக்கியமான பிரச்சனை சட்டம்​ஒழுங்கு சீரழிவு.  அமைதிப் nullங்காவாக இருந்த தமிழகத்தை அமளிக் காடாக மாற்றினார்கள் முந்தைய ஆட்சியாளர்கள். இதனை சீர்செய்யும் விதமாக சட்டம்​ஒழுங்கை நிலைநாட்டவும், நிருவாகத்தை செம்மையாக்கவும் எனது தலைமையிலான அரசு முன்னுரிமை அளித்து வருகிறது.

நான் முதலமைச்சராக பொறுப்பேற்கும் போதெல்லாம், காவலர்கள் தங்கள் பணிகளில் எத்தகைய குறுக்கீடும், இடையூறும் இல்லாமல் சுதந்திரமாகச் செயல்பட்டு, மக்களுக்கான தங்கள் கடமையை செவ்வனே செய்ய வழிவகை ஏற்படுகிறது.  அப்போதேல்லாம் சமூக விரோதிகள் மீதும், தீவிரவாதிகள் மீதும் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, தமிழகம் ஒரு அமைதிப் nullங்காவாகத் திகழ்கிறது.  அதே போன்று, தற்போதும், சட்டம்​ஒழுங்கை நிலைநாட்டி, மக்கள் எவ்வித பயமும் இன்றி அமைதியாக தங்களது வாழ்க்கையை நடத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எனது தலைமையிலான அரசு முனைப்புடன் எடுத்து வருகிறது. ஒரு மாநிலத்தில் சட்டம்​ஒழுங்கு சிறப்பாக நிலைநாட்டப்பட வேண்டும் எனில், அந்த மாநிலத்தில் காவலர்கள் தங்கள் பணிகளில் எந்தவித குறுக்கீடும் இன்றி, தங்கள் பணிகளை நியாயமாகவும், நேர்மையாகவும் செய்ய வேண்டும். கடந்த 5 ஆண்டு காலமாக சமூக விரோதிகளைக் கண்டு காவலர்கள் அஞ்சிய துர்பாக்கியமான சூழ்நிலையை தலைகீழாக மாற்றி, சமூக விரோதிகள் காவலர்களைக் கண்டு அஞ்சும் சூழ்நிலையை நான் பொறுப்பேற்ற உடனேயே மீண்டும் உருவாக்கி உள்ளேன் என்பதைச் சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன். எல்லோரும், எல்லாமும் பெற்று, வாழ்வில் வளம் பெறும் வகையிலான ஆட்சி அமைவதே சிறந்த மக்களாட்சி ஆகும்.  இவ்வாறான மக்களாட்சியில் தான், ஏழைகளும், வசதி படைத்தோருக்கு இணையான வசதிகளைப் பெற இயலும். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்