முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இடைப்பாடி கோவில் நிலம் அபகரிப்பு-வீரபாண்டி ஆறுமுகம் மீது புதிய புகார்

செவ்வாய்க்கிழமை, 16 ஆகஸ்ட் 2011      அரசியல்
Image Unavailable

சேலம் ஆக.- 16 - இடைப்பாடி அருகே கோவில் நிலத்தை அபகரித்து கொண்டதாக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மீது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புதியதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் மீது போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். தி.மு.க.ஆட்சி காலத்தில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் ஆட்சி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து அவரும், அவரது குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நில அபகரிப்பு செய்துள்ளதாக புகார்கள் வந்தவண்ணம் உள்ளது.சேலம் அங்கம்மாள் காலனி, 5 ரோடு பிரிமியர் ரோலர் மில் நில அபகரிப்பு வழக்குகளில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் முன் ஜாமீன் பெற்று இருந்தாலும், நிலவாரப்பட்டி பகுதியில் தனக்கு சொந்தமான நிலத்தை வீராபண்டி ஆறுமுகம் தூண்டுதலினால் அபகரிக்கப்பட்டதாக பாலமோகன்ராஜ் என்பவர் அளித்த புகாரின் பேரில் மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த 3 புகாரும் மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் வந்தவவை. தற்போது வீரபாண்டி ஆறுமுகம் மீது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் கோவில் நிலத்தை அபகரித்துள்ளதாக ஒரு புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே உள்ள வெள்ளாண்டி வலசு காந்தி நகரைச் சேர்ந்த மணி என்பவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனனிடம் புகார் கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது.நான் இடைப்பாடி கவுண்டம்பட்டி ஸ்ரீ அய்யனாரப்பன் கோவில் பரம்பரை nullசாரியாகவும், அறக்கட்டளை தலைவராகவும் உள்ளேன். இந்த கோவில் எனது குடும்பத்திற்கு உயில் மூலம் பாத்தியப்பட்டது. வன்னிய குல சத்திரியர் அறக்கட்டளை நிறுவப்பட்டு பதிவு செய்து நிர்வகித்து வருகிறேன்.

இது எங்களது குடும்ப கோயிலாகும். இந்த கோயிலுக்கு செல்வதற்கு வழித்தடம் மற்றும் பொங்கல் வைக்க இடம் இல்லை. இதனால் நான் இப்பகுதியில் 4.25 ஏக்கர் நிலத்தை விலைக்கு வாங்கினேன். இந்த நிலத்தை முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், அவரது மகன் முன்னாள் எம்.எல்.ஏ.ராஜா ஆகியோருக்காக கல்லூரி கட்ட வேண்டியது உள்ளது. ஆகவே ரூ.12 லட்சம் வாங்கிக் கொண்டு நிலத்தை கிரயம் செய்து கொடுத்துவிடு என்று எடப்பாடி தி.மு.க.நகர செயலாளர் ஜெயnullபதி கேட்டார்.நான் மறுத்துவிட்டேன். 2009 ல் கோயிலில் nullஜை செய்து கொண்டிருந்த போது காரில் வந்த 4 பேர் எனஅனை nullலாவாரியில் உள்ள வீரபாண்டி ஆறுமுகத்தின் வீட்டிற்கு அழைத்து வந்தனர். வீரபாண்டி ஆறுமுகம் மற்றும் அவரது மகன் ராஜா ஆகியோர் என்னிடம் ரூ.12 லட்சத்தை வாங்கிக் கொண்டு ஜெயnullபதி பெயருக்கு நிலத்தை எழுதிக் கொடு, இல்லையென்றால் கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டினர்.பின்னர் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், அவரது மகன் ராஜா,தி.மு.க.நகர செயலாளர் ஜெயnullபதி ஆகியோர் வெற்று பத்திரத்தில் கையெழுத்து வாங்கிக் கொண்டனர். நிலம் பறிபோய்விடுமோ என்ற பயத்தில் நான் என்னுடைய சகோதரர் ஆறுமுகம் பெயருக்கு கிரயம் செய்துவிட்டேன். அதன் பிறகு போலீசார் என்னை அழைத்து பேசினர். வீரபாண்டி ஆறுமுகத்திற்கு நிலத்தை கொடுத்துவிடு இல்லையென்றால் உன் மீது பொய் வழக்கு போடுவோம் என்று மிரட்டி கோயிலில் nullஜை செய்யவும் விடமாட்டோம் என்றனர்.நான் மறுத்ததால் கோயில் சாவியை பிடிங்கிக் கொண்டு,அங்கிருந்த பஞ்ச லோக சிலைகளையும் எடுத்துச் சென்றுவிட்டனர்.

ஆகவே அய்யனாரப்பன் கோயில் சொத்து,பஞ்சலோக சிலைகள், கோயிலுக்காக வாங்கிய 4.25 ஏக்கர் நிலம் ஆகியவற்றை அபகரித்துக் கொண்ட முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், அவரது மகன் முன்னாள் எம்.எல்.ஏ.ராஜா,எடப்பாடி தி.மு.க.செயலாள் ஜெயnullபதி உள்பட 29 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறியுள்ளார்.

இந்த புகாரை பெற்றுக் கொண்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன்,உடனடியாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கும்படி சங்ககிரி டி.எஸ்.பி.ராமசாமிக்கு உத்தரவிட்டுள்ளார். அதன் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்