முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லிபியா அதிபர் மீது ஐ.நா. சபை வழக்கு

சனிக்கிழமை, 5 மார்ச் 2011      உலகம்
Image Unavailable

 

திரிபோலி,மார்ச்.- 5 - லிபியா அதிபர் கடாபி மீது ஐ.நா. சபை கோர்ட்டில் வழக்கு தொடரப்படவுள்ளது. அதிபர் கடாபியை பதவி விலக வலியுறுத்தி மக்கள் போராட்டம் நடத்தி வரும் வேளையில் அவர் மறுப்பு தெரிவித்ததையடுத்து லிபியாவில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. பெங்காஜி, பிரகா உள்ளிட்ட 4 நகரங்களை போராட்டக்காரர்கள் தங்களது கட்டுக்குள் கொண்டு வந்து விட்டனர். இதையடுத்து அவற்றை மீட்க ராணுவம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இருந்தும் அந்த நகரங்களை ராணுவத்தால் மீட்க முடியவில்லை. 

இந்த நிலையில் ராணுத்தினருடன் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கூலிப் படையினரும் போராட்டத்தில் ஈடுபட்டு மக்களை தாக்கி வருகின்றனர். நேற்று முன்தினம் நடந்த தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர். எண்ணெய் கிடங்குகளை குறி வைத்து நடத்தப்படும் இந்த தாக்குதல்களை தொடர்ந்து எண்ணெய் கிடங்குகளுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

இதற்கிடையை கடாபி மீது ஐ.நா. சபை சர்வதேச கோர்ட்டில் வழக்கு தொடரப்பட உள்ளது. இதுகுறித்து சர்வதேச கிரிமினல் கோர்ட்டின் வக்கீல் லூயிஸ் மொரேனோ கூறும் போது, மனித உரிமைகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது கடாபியின் ராணுவம் தாக்குதல் நடத்தி வருவது குறித்து எங்களுக்கு ஆதாரங்கள் கிடைத்துள்ளது. எனவே கடாபி அவரது மகன்கள் மற்றும் ஆதரவாளர்கள் மீது வழக்கு தொடரப்படும் என்று தெரிவித்தார். ஐ.நா. சபையின் சர்வதேச கோர்ட் நெதர்லாந்தில் உள்ள ஹாக்கூ நகரில் உள்ளது குறிப்பிடத்தக்கது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்