முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் நல்லவர் ஆட்சிக்கு வந்துள்ளார் - சரத்குமார் புகழாரம்

புதன்கிழமை, 17 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை,ஆக.- 17 - நல்லோர் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை என்பது போல, நல்லவர் ஒருவர் ஆட்சிக்கு வந்துள்ளார். தனால் விவசாயிகள் அனைவரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் திகழ்ந்துள்ளனர் என்று சட்டபேரவையில் சரத்குமார் புகழாரம் சூட்டினார்.  விவசாயமானிய கோரிக்கை மீதான விவாதம் நேற்று சட்டபேரவையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு சமத்துவ மக்கள் கட்சி தலைவர்  சரத்குமார் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் வேளாண்மைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் எனக்கு பேச வாய்ப்பளித்த தங்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ்நாட்டை பொறுத்தவரையில் பண்டைக்காலம் முதல் வேளாண்மை முக்கியத் தொழிலாக போற்றப்பட்டு வருகிறது.  நெல்லுக்கு இறைத்தநீர் வாய்கால் வழியோடு புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்- தொல்லுலகில்

நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு 

எல்லாருக்கம் பெய்யும் மழை- என்று மூதுரையில் தமிழ் மூதாட்டி ஒளவையார்  கூறியுள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா ஆட்சி செய்யும் இந்நாளில் கர்நாடக மாநிலம். தலைக்காவிரியில் பெருமளவு மழை பெய்துள்ளது. காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஏற்கனவே நிரம்பிய மேட்டூர் அணையை மீண்டும் நிரப்பி தமிழக விவசாயிகளை பெருமகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தமிழ்நாட்டில் மகிழ்ச்சிகரமாக  விவசாயம் செய்ய பெரிதும் மழையை நம்பியுள்ளார்கள். இந்தியாவில் மழை குறைந்து பெய்யும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாகும். ஆறு,குளங்கள்,ஏரிகள் ஆகியவற்றின் பாசனம் 95 சதவீதம். நிலத்தடி நீர் 85 சதவீதம் பயன்படுத்தப்பட்ட  பின்னரும், தமிழ்நாட்டில் நிகர பாசனப்பரப்பு 58 சதவீதம் தான் உள்ளது என நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை சொட்டுநீர், தெளிப்புநீர்ப் பாசனமுறைகள் மூலமே இந்த 58 சதவீதத்தை உயர்த்த முடியும் என்பதை இந்த அரசு உணர்ந்துள்ளது.

 நுண்ணீர் பாசன உத்திகளில் இஸ்ரேல் நாடு சிறந்து விளங்குகிறது. அதேபோல் ஐப்பான் நாடும் சிறந்த வேளாண் உத்திகளை கையாண்டு அதிக அளவு உற்பத்தி  செய்கிறது. சுனாமி, எரிமலை வெடித்தல் போன்ற இயற்கை சீற்றங்கள் இருந்தபோதும் உற்சாகத்துக்கு பெயர்பெற்ற ஐப்பானிய மக்கள், உணவில் தன்னிறைவு பெற்றுள்ளனர். அதேபோல் பாலைவன நாடான துபாயும், சிறந்த வேளாண் உத்திகளை கையாண்டு, அங்கு  மிகவும் அரிதாக கிடைக்கும் தண்ணீரைப் பயன்படுத்தி உணவு உற்பத்தி செய்து வருகின்றனர்.

1991 ம் ஆண்டிலேயே நுண்ணீர் பாசன உத்திகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டாலும், செலவு காரணமாக  விவசாயிகளிடையே பெருமளவில் வரவேற்பை பெறவில்லை. முதல்வர் ஜெயலலிதாவின் அரசு இதனை நன்கு ஆய்வு செய்து நிதிநிலை அறிக்கையில், சொட்டுநீர், தெளிப்புநீர் பாசனத்திற்கு,சிறு விவசாயிகளுக்கு 100 சதவீதமும்,  மற்றவர்களுக்கு 75 சதவீதமும் மானியம் அளித்திருப்பது மகிகழ்ச்சிக்குரிய செய்தியாகும், இ ந்த மானிய சலுகை 100 சதவீதமும் விவசாயிகளுக்கு  சென்றடையும்  வகையில்,அரசு செயல்படுத்தும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

மேலும் 2011-2012 ஆண்டில் நுண்ணீர் பாசன இயக்கத்தின் கீழ் 1,25,000 ஏக்கர் நிலப்பரப்பு நுண்ணீர் பாசன முறையின் கீழ் 152 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் கொண்டுவரப்படுவது, கிடைக்கும் நீர் ஆதாரத்தை சிறப்பாகப் பயன்படுத்த  வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லை.

விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் தரும் கால்நடை வளர்ப்பிற்கு இந்த அரசு  முக்கியத்துவம் அளித்து, பால் உற்பத்தியில் இரண்டாம் வெண்மை புரட்சியை உருவாக்கத்  திட்டமிட்டுள்ளது வரவேற்கத்தக்கது.  தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் அடுத்த ஐந்தாண்டுளில் வறுமையில் வாடும் குடும்பங்களுக்கு 60,000 கறவை மாடுகளில் முதல்தவணையாக  2011-2012  ம் ஆண்டில்  56 கோடி ரூபாய் செலவில் 12,000 ஜெர்சி போன்ற கலப்பின மாடுகளை இலவசமாக வழங்க இருப்பது, விவசாயிகளின் வயிற்றில் பால்வார்க்கும் செய்தியாகும்.

மேலும் இந்த அரசு 2011-2012 ஆம் ஆண்டில் ஒரு லட்சம் விவசாயக் கூலித் தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா 12,000 ரூபாய் மதிப்புள்ள ஆடுகளை 135 கோடி ரூபாய் செலவில் வழங்கவிருப்பதை வரவேற்கின்றேன். தமிழ்நாட்டில் தீவன பற்றாக்குறை உள்ளது என நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதால், கறவை மாடுகள், ஆடுகள் வழங்கப்படும் குடும்பங்களுககு பசுமை மற்றும் உலர்  தீவனங்களையும், மானிய விலையில் வழங்க இயலுமா என்பதையும் முதல்வர்  கனிவுடன் பரிசீலிக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன். 

தமிழ்நாட்டில் ஆங்காங்கே அரசு புறம்போக்கு நிலங்கள் இருப்பின் அவற்றை  கால்நடை மேய்ச்சல் நிலங்களாக மேம்படுத்த இயலுமா என்பதையும் அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வே ண்டுகிறேன். அதிகத் தீவனம், அதிகப்பால் என்ற நிலைதான் கலப்பின மாடுகளை பொறுத்து உள்ளது. குறைந்த தீவனம் அதிகபால் என்ற முறையில் இந்தியாவில் ராஜஸ்தான் தார்பாக்கர், ஆந்திரா நெல்லூர்,ஓங்கோல் மாடுகள் குறைந்த தீவனத்தில் 20 மதல் 25 லிட்டர் அதிக பால்தரக்கூடியவை. இவற்றின் சாணமும், கோமியமும், கலப்பின மாடுகளை விட சக்திமிகுந்த மக்கிய உரத்தை அளிக்க கூடியவை. மேலும் உழவு செய்ய இவை பெரிதும் பயன்படும். இரண்டாம் வெண்மை புரட்சி மூலம் சாதிக்க இருக்கும் இந்த அரசு சிறந்த நாட்டு மாடுகளையும் இந்த திட்டத்தில் வழங்க வாய்ப்பள்ளதா என்பதையும் பரிசீலிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். இவ்வாறு சரத்குமார் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்