முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீண்டும் சபையை புறக்கணிக்க தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முடிவு:கருணாநிதி அறிவிப்பு

புதன்கிழமை, 17 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.- 17 - சட்டசபையில் மீண்டும் புறக்கணிக்க தி.மு.க. முடிவு செய்துள்ளதாக கட்சியின் தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இது குறித்த விபரம் வருமாறு:- தங்களுக்கு உரிய இடத்தில் இருக்கைகள் ஒதுக்கப்படவில்லை என்று காரணம் கூறி தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையை புறக்கணித்தனர். இந்நிலையில் மீண்டும் சட்டமன்ற கூட்ட தொடரில் கலந்து கொண்டு மக்களுக்கு ஜனநாயக கடமை ஆற்ற போவதாக சபாநாயகரிடம் கடிதம் கொடுத்து விட்டு நேற்று நடந்த சட்டசபை கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்நிலையில் நேற்று சட்டமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொண்ட தி.மு.க. சட்ட மன்றக்குழுவின் துணைத்தலைவர் துரைமுருகன் அவையில் தனது உடல்மொழியால் அவையின் உரிமையை மீறும் விதமாக நடந்து கொள்வதாக உள்ளாட்சி துறை அமைச்ச் கே.பி.முனுசாமி குற்ற சாட்டினார். துரைமுருகனின் இந்த செயலுக்கு சபாநாயகர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்தார்.

இதை பொறுத்துக்கொள்ள முடியாத தி.மு.க உறுப்பினர்கள் ஸ்டாலின் தலைமையில் வெளிநடப்பு செய்தனர்.

இதையடுத்து நேற்று மாலை சென்னையில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் முடிந்தபின்பு நிருபர்களுக்கு பேட்டி அளித்த தி.மு.க. தலைவர் கருணாநிதி,  மீண்டும் சட்டசபையை புறக்கணிக்க முடிவு எடுத்திருப்பதாக அறிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்