முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்திரேலியாவைப் போல இங்கிலாந்தும் ஆதிக்கம் செலுத்தும் - வார்னே அதிரடி பேட்டி

புதன்கிழமை, 17 ஆகஸ்ட் 2011      விளையாட்டு
Image Unavailable

மெல்போர்ன், ஆக. - 17 - உலக கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவைப் போல இங்கிலாந்து அணியும் ஆதிகம் செலுத்தும் என்று ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரரான ஷேன் வார்னே தெரிவித்து இருக்கிறார்.  ஆஸ்திரேலியாவின் முக்கிய நகரமான மெல்போர்னில் நிருபர்களைச் சந்தித்த அவர் இங்கிலாந்து அணியின் வெற்றி குறித்து கேட்ட போது, மேற்கண்டவாறு பதில் அளித்தார். அவர் மேலும் கூறியதாவது -  இங்கிலாந்து அணி நம்பர் - 1 அணியாக இருப்பதற்கு அனைத்து தகுதி களையும் கொண்டுள்ளது. 1990 மற்றும் 2000 - த்தில் ஆஸ்திரேலிய அணி உலக கிரிக்கெட்டில் எப்படி ஆதிக்கம் செலுத்தியதோ அதே போன்று வரும் காலங்களில் இங்கிலாந்து அணி ஆதிக்கம் செலுத்தும்.  தற்போது இங்கிலாந்து அணியும் சரி, தனிப்பட்ட முறையில் வீரர்களு ம் சரி, ஆஸ்திரேலிய வீரர்களை விட சிறப்பானவர்கள். ஸ்ட்ராஸ், குக் நிலையான ஆட்டத்தை கொடுக்கின்றனர்.
பீட்டர்சன், மோர்கன் அதிரடியாக விளாசுகின்றனர். பந்து வீச்சாளர்க ள் தங்களது திட்டங்களை சரியான முறையில் வெளிப்படுத்துகின்றனர். ஆண்டர்சன், பிரஸ்னன், பிராட் மற்றும் ஸ்வான் என பந்து வீச்சு கலவை பிரமாதமாக உள்ளது.
இவர்கள் பீல்டிங்கிலும் அசத்துவதோடு பேட்டிங்கில் விரைவாக ரன் குவிக்கும் தன்மையும் பெற்று உள்ளனர். மொத்தத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு இது பொன்னான காலம். இவ்வாறு அவர் கூறி னார்.
ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க்கிடம் இங்கிலாந்து அணியின் முன்னேற்றம் குறித்து கேட்ட போது, அவர் கூறியதாவது - இங்கி லாந்து அணி கடந்த 2 ஆண்டுகளாகவே சிறப்பாக ஆடி வருகிறது.
நம்பர் - 1 இடத்தில் இருப்பதற்கு அந்த அணி முழுத் தகுதியும் கொண்டுள்ளது. பந்து வீச்சாளர்கள் இந்த நிலையை அடைய முக்கிய காரண மாக இருந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே தற்போது 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. இதில் ஏற் கனவே 3 போட்டிகள் முடிவடைந்து விட்டன.
இங்கிலாந்து அணி முடிவடைந்த 3 போட்டியிலும் வெற்றி பெற்று 3 - 0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்திய அணியின் மோச மான ஆட்டம் குறித்து முன்னாள் வீரர்கள் பலர் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்