முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் ஜோகோவிச், செரினா சேம்பியன்

புதன்கிழமை, 17 ஆகஸ்ட் 2011      விளையாட்டு
Image Unavailable

 

மோன்ரியல்,ஆக.- 17 - கனடாவில் நடைபெற்ற ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் ஆடவர் பிரிவில் ஜோகோவிச்சும், மகளிர் பிரிவில் செரினா வில்லியம்சும் சாம்பியன் பட்டம் பெற்றனர்.  இறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் மார்டிபிஸ், செர்பியாவை சேர்ந்த நோவா ஜோகோவிச்சை எதிர்கொண்டார். இதில் 6 - 2, 3 - 6, 6 - 4 என்ற செட் கணக்கில் ஜோகோவிச் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இவர் இந்த ஆண்டில் பெற்றுள்ள 29 வது தொடர் வெற்றியாகும். மகளிர் பிரிவு இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோசர், அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ்ஆகியோர் மோதினர். இதில் 6 -4, 6- 2 என்ற செட் கணக்கில் செரினா வில்லியம்ஸ் வென்றார். இது அவர் பெறும் 38 வது பட்டமாகும். இதில் 13 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களும் அடங்கும். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்