முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக வளர்ச்சித்துறை மாவட்ட உதவி இயக்குநர்களுக்கு 12 ஜீப்புகள்-ஜெயலலிதா வழங்கினார்

புதன்கிழமை, 17 ஆகஸ்ட் 2011      அரசியல்
Image Unavailable

சென்னை, ஆக.- 17 - தமிழக வளர்ச்சித்துறை  மாவட்ட உதவி இயக்குனர்களுக்கு 12 புதிய ஜீப்புகளை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று தலைமைச் செயலகத்தில், தமிழ் வளர்ச்சித்துறை மாவட்ட உதவி இயக்குநர்களுக்கு 51 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 10 ஜீப்புகள்  வழங்கினார். தமிழ் வளர்ச்சித்துறைத் துறையால் மேற்கொள்ளப்படும் ஆட்சி மொழித் திட்டச் செயலாக்கம் மற்றும் தமிழ் வளர்ச்சிப் பணிகளை சீரிய முறையில் செயல்படுத்திடவும், உதவி இயக்குநர்கள் மாவட்டத்திலுள்ள அரசுத்துறை அலுவலகங்கள், கழகங்கள், வாரியங்கள், தன்னாட்சி நிறுவன அலுவலகங்களை ஆய்வு செய்யவும், ஆய்வு தொடர்பான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளவும், இராமநாதபுரம், கரூர், கடலூர், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், நாமக்கல், நீலகிரி, தருமபுரி மற்றும் தூத்துக்குடி ஆகிய பத்து மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகங்களுக்கு புதிய ஜீப்புகள் வாங்க ஒப்புதல் அளித்திருந்தார். அதன்படி வாங்கப்பட்ட ஜீப்புகளின் சாவிகளை ஜீப்பு ஓட்டுநர்களிடம் தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று தலைமை செயலகத்தில் வழங்கினார்.
இந்நிகழ்வின்போது, இந்துசமய அறிநிலையங்கள் தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ்ப் பண்பாட்டுத்துறை அமைச்சர், தலைமை செயலாளர், தமிழ் வளர்ச்சி, அறநிலையங்கள் மற்றும் செய்தித்துறைச் செயலாளர், தமிழ் வளர்ச்சி இயக்குநர் மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்