முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வனவிலங்கு தாக்கி உயிரிழந்த குடும்பங்களுக்கு நிவாரண நிதி ரூ.3 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்-ஜெயலலிதா அறிவிப்பு

புதன்கிழமை, 17 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஆக.- 18 - வனவிலங்குகளால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு, நிவாரண நிதி ரூ.1 .5 லட்சத்திலிருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை நேற்று முதலமைச்சர் ஜெயலலிதா விதி 110-ன் கீழ் அறிக்கை ஒன்றை வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது:- மக்கட்தொகைப் பெருக்கத்தாலும், தொழில் மயமாக்கலாலும் வன விலங்குகளின் இயற்கை வாழ்விடங்கள் பாதிக்கப்படுகின்றன. எனவே, வன விலங்குகள் அடிக்கடி காடுகலை விட்டு வெளியேறி மனிதர்கள் வாழும் பகுதிகளுக்குள் நுழைவதால், மனிதர்கள், பயிர்ச் சேதம், உடமைகள் சேதம், கால் நடைகள் இழப்பு போன்ற பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர். சில நேரங்களில் வன விலங்குகளின் வாழ்விடங்களை மேம்படுத்துதல், அவை விரும்பி உண்ணும் பயிர்களை வனப் பகுதிகளில் வளர்ப்பது, வனங்களின் எல்லைப் பகுதிகளில் தடைகளை உருவாக்குவது, மனித உயிர்களுக்கும், விவசாயப் பயிர்களுக்கும், உடமைகளுக்கும் வன விலங்குகளால் ஏற்படும் பாதிப்பிற்கு உடனடியாக இழப்பீடு வழங்குவது போன்ற பல்முனை அம்சங்கலை உள்ளடக்கிய செயல் திட்டத்தின் மூலம் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படுமந் என்று, 4.8.2011 அன்று இந்த மாமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட, 2011-12-ம் ஆண்டுக்கான திருத்த வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டு அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது. வன விலங்குகளால் மனித உயிரிழப்பு ஏற்படும் போது வழங்கப்படும் இழப்பீட்த் தொகை 1.50 லட்சம் ரூபாயில் இருந்து 3 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி வன விலங்குகளால் மனிதர்களுக்கு உயிர் இழப்போ அல்லது நிரந்தர ஊனமோ ஏற்படும் போது வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை 1.50 லட்சம் ரூபாயில் இருந்து, 3 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். மேலும், பயிர்ச் சேதம், உடமைகள் சேதம், கால்நடைகள் இழப்பு ஆகியவற்றிற்கான இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி வழங்கவும் எனது தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது.
இதன் அடிப்படையில் வன விலங்குளால் ஏற்படும் பயிர்ச் சேத்திற்கான இழப்பீட்டுத் தொகை இதுவரை ஏக்கருக்கு 15,000 ரூபாய் என்ற அளவில் இருந்து, ஏக்கருக்கு 25,000 ரூபாய் என்ற அளவில் உயர்த்தி வழங்கப்படுவதுடன், சேதம் அடைந்த தென்னை மரங்களுக்கும், மரத்திற்கு 500 ரூபாய் என்ற அளவில் இழப்பீடு வழங்கப்படும். வன விலங்குகளால், ஓட்டு வீடுகள்,  ஆர்சிசி வீடுகள், கூரை வீடுகள், எந்த அளவுக்கு சேதம் அடைந்தாலும், இதுவரை 5,000 ரூபாய் மட்டும் இழப்பீடாக வழங்கப்பட்டு வந்தது.
இந்தத் தொகை இனி, முழுவதும் சேதம் அடைந்த ஓட்டு வீடு ஆர்சிசி வீடுகளுக்கு 35,000 ரூபாயாகவும், கூரை வீடுகளுக்கு 10,000 ரூபாயாகவும் இனி உயர்த்தி வழங்கப்படும். பெருமளவில் பாதிப்புக்கு உள்ளான  ஓட்டு வீடு ஆர்சிசி வீடுகளுக்கு 5,000 ரூபாயும், கூரை வீடுகளுக்கு 2,000 ரூபாயும், பகுதி சேமடைந்த வீடுகளுக்கு 1,500 ரூபாயும் இனி வழங்கப்படும்.
மேலும் வன விலங்குகளால் ஆடு, செம்மறியாடு, பன்றி போன்ற கால்நடைகள் இழப்பு ஏற்பட்டால், இதுவரை அனைத்துக்கும் 1000 ரூபாய் என்ற வீதத்தில் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டு வந்தது. இனி, அந்தத் தொகை ஆட்டுக்கு 2,000 ரூபாய் என்ற அளவிலும், செம்மறி ஆட்டுக்கு 1,500 ரூபாய் என்ற அளவிலும், பன்றிக்கு 1,000 ரூபாய் என்ற அளவிலும் வழங்கப்படும். கோழி போன்ற ரீட்டில் வளர்க்கப்படும் பறவை இனங்கள் இழப்பு ஏற்பட்டால், இதுவரை பறவைக்கு 30 ரூபாய் என்ற அளவில் உயர்த்தி வழங்கப்படும். வன விலங்குகளால் உடமைகளுக்கு இழப்பு ஏற்பட்டால், உண்மையான இழப்பின் அளவு அல்லது 100 ரூபாய் இவற்றில் எது அதிகமோ, அந்தத் தொகை இழப்பீட்டுத் தொகையாக இதுவரை வழங்கப்பட்டது. இனி, வன விலங்குகளால் உடமைகள் இழப்பு ஏற்பட்டால், 2,000 ரூபாய் வரை இழப்பீடு வழங்கப்படும் என்பதை மன நிறைவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago