முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

20 சாயப்பட்டறைகளுக்கு ரூ.200 கோடி வட்டியில்லா கடன்-முதல்வர் விளக்கம்

வியாழக்கிழமை, 18 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.- 18 - திருப்பூர் சாயப்பட்டறைகள் மூடிக்கிடக்கின்றன, இதனால் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சாயக்கழிவுகளால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை தீர்க்க நவீன தொழில்நுட்ப மூலம் 20 சாயப்பட்டறைகளுக்கு வட்டியில்லா கடனாக ரூ.200 கோடி அளிக்கப்பட்டது என்று முதல்வர் விளக்கமளித்தார். தொழில்துறை மானிய கோரிக்கையின் மீது கலந்து கொண்டு பேசிய தே.மு.தி.க. உறுப்பினர் பாண்டியராஜன் பேசும்போது திருப்பூரில் 10 ஆண்டுகளுக்கு 200 கோடி கடனாக கொடுத்துள்ளோம். கடனாக கொடுக்காமல் தனி நிறுவனங்கள் உருவெடுக்க முயற்சி எடுத்தால் நன்றாக இருக்கும் என்று பேசினர். அப்போது குறுக்கிட்டு பேசிய முதல்வர் சாயப்பட்டறைகள் மூடிகிக்கின்றன. விவசாயிகள் பிரச்சனை ஒருபுறம், சாயப்பட்டறை தொடங்கப்பட வேண்டும் தொழிலாளர் வேலைவாய்ப்பு உருவாக்கப்பட வேண்டும். நவீன தொழில்நுட்பம் மூலம் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தால் சாயக்கழிவு பிரச்சனை தீரும் அதற்கு ரூ.10 கோடி ஆகும். அதற்கான செலவை செய்வதற்கு அந்த ஆலைகளுக்கு நிதி ஆதாரம் இல்லை என்று அணுகினார்கள். 20 நவீன சுத்திகரிப்பு நிலையங்களுக்கு ரூ.10 கோடி வீதம் ரூ.200 கோடி அரசு வட்டியில்லா கடன் அளித்துள்ளது. இதை அவர்கள் தொழில் நடத்தி லாபம் ஈட்டியதுடன் திருப்பி தருவார்கள். இதில் எந்த புதிய நிறுவனத்தை உறுப்பினர் உருவாக்க சொல்கிறார் என்று கேள்வி எழுப்பினார்.

மற்றொரு விவாதத்திற்கு பதிலளிக்கையில் தமிழகத்தில் உறுப்பினர் குஜராத், மஹாராஷ்ட்ரா பற்றி தெரிந்துள்ள அளவு தமிழகத்தை பற்றி தெரிந்து வைத்திருக்கவில்லை.  போர்ட் கார் மட்டுமல்லாமல் ஹீண்டாய், நிஸ்ஸான், பிஎம்டபிள்யூ போன்ற கார் கம்பெனிகளும் காண்ட்கொபேன் என்ற கண்ணாடி நிறுவனமும் வந்துள்ளது. இன்றைக்கு தமிழ்நாடு ஆட்டோமொபைல் மற்றும் ஆட்டோ மொபைல் உபகரணங்களில் இந்திய அளவில் முதன்மை வகிக்கிறது. அடுத்த 5 ஆண்டுகளில் உலக அளவில் தரம் வாய்ந்ததாக மாறும் என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago